சடலங்களை எரியூட்டுபவருக்கு ஊர்மக்கள் மக்கள் தேர்தலில் செய்த வெகுமதி.! - Seithipunal
Seithipunal


மின்மயானத்தில் சடலங்களை எரியூட்டுபவரின் மனைவி ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஊராட்சி ஒன்றியம் கவுண்டச்சிபுதூர் ராம்நகர் பகுதியை வசித்து வருபவர்  ரமேஷ். இவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக தாராபுரம் நகராட்சி மின்மயானத்தில் சடலங்களை எரியூட்டுபவராகவும் அங்கேயே பணிமேலாளராகவும் வேலை செய்து வருகிறார். ரமேஷின் மனைவி செல்வி நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் கவுண்டச்சிபுதூரில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு சுயேட்சையாக போட்டியிட்டார்.  

இந்தநிலையில், செல்வி 982 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார். எந்த வித அரசியல் பின்புலமும் இல்லாமல் கணவன்- மனைவி மட்டும் வீடுவீடாக சென்று வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டனர். தம்மை வெற்றி பெற செய்த கிராம மக்களுக்காக சமூக பணியாற்றுவேன் என செல்வி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man burned the bodies that wife was chosen as the president


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->