ஏமன் நாட்டிற்குச் சென்றதற்காக சென்னை விமான நிலையத்தில் வாலிபர் கைது.! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து குவைத் செல்லும் விமானம் புறப்பட தயாராகி கொண்டு இருந்தது. இந்த விமானத்தில் ஏறுவதற்காக கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த நைமூர் ரகுமான் ஹபிபுல்லா என்பவர் வந்திருந்தார். 

அதன் படி, விமான நிலையத்தில் குடியுரிமை அதிகாரிகள் அவருடைய கடவுச் சீட்டு ஆவணங்களை பரிசோதனை செய்தனர். அதில் அவர், குவைத் நாட்டிற்கு வேலைக்காக சென்றுவிட்டு அங்கே இருந்து ஏமன் நாட்டுக்கு சென்று வந்தது தெரிந்தது. 

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, "குவைத்தில் பணியில் இருந்தபோது பணி நிமித்தமாக இரண்டு முறை ஏமன் நாட்டுக்கு சென்று வந்தேன். அது இந்திய அரசு தடை செய்யப்பட்ட நாடு என்று தனக்கு தெரியாது என்றுத் தெரிவித்துள்ளார். 

இதையடுத்து நைமூர் ரகுமான் ஹபிபுல்லாவின் பயணத்தை ரத்து செய்த அதிகாரிகள், அவரை மேல் நடவடிக்கைக்காக சென்னை விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனர். அதன் பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இந்திய அரசின் பாதுகாப்பு காரணங்களுக்காக ஏமன் மற்றும் லிபியா உள்ளிட்ட இரண்டு நாடுகளுக்கு இந்தியர்கள் செல்ல கடந்த 2014-ம் ஆண்டு முதல் தடை உத்தரவு போடப்பட்டு உள்ளது. இந்த தடையை மீறி செல்பவர்கள் மீது குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசாணை வெளியிடபட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man arrested for going yeman country in chennai airport


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->