அறவழி போராட்டத்திற்கு கிடைக்கும் பரிசு இதுவா?.. கொந்தளிக்கும் மக்கள் நீதி மய்யம்.!! - Seithipunal
Seithipunal


மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், " கடந்த 25ம் தேதி 10அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 2மணி நேரம் மட்டும் டாஸ்மாக் மதுபான கடைகளை அடைத்து அதன் ஊழியர்கள் அறவழியில் போராடியதற்காக சுமார் 450 ஊழியர்களை பணியிட மாற்றம் செய்து சர்வாதிகார போக்கோடு நடந்து கொண்டிருக்கும் தமிழக அரசின் தொழிலாளர் விரோத போக்கிற்கு மக்கள் நீதி மய்யம் தொழிலாளர்கள் அணி சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் நடைமுறையில் உள்ள சத்துணவு திட்டத்தில் பயன்பெறும் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு தற்போதைய ஊரடங்கு காலகட்டத்திலும் சத்தான உணவு சென்றடைய வேண்டும் என்கிற நோக்கத்தில் அதனை உலர் பொருட்களாக வழங்கப்பட்டு வருவதால் அதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருகிறது. அவ்வாறு நடைபெறும் முறைகேடுகளை தடுத்து மாணவ, மாணவியருக்கு சத்தான உணவுகள் கிடைப்பதை உறுதி செய்ய உலர் பொருட்களாக வழங்காமல் சமைத்து, சமூக இடைவெளியை பின்பற்றி வழங்கிட உத்தரவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஜூலை 7ம் தேதி தமிழகம் முழுவதும் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவச் செல்வங்களின் நலன் சார்ந்து கோரிக்கைகளை முன்வைத்து விடுமுறை தினத்தில் முறையான சமூக இடைவெளியை கடை பிடித்தும், முகக்கவசங்கள் அணிந்தும் அறவழியில் போராடிய சத்துணவு ஊழியர்களின் அன்றைய ஒரு நாள் ஊதியத்தை பிடித்தம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது.

சத்துணவு ஊழியர்கள், டாஸ்மாக் பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அரசு ஊழியர்கள் தங்களின் நியாயமான கோரிக்கைகளுக்காக காந்தி கண்ட அறவழியில் போராடுவதை முடக்கி இந்த கொரோனா பேரிடர் காலத்தில் கூட தொழிலாளர் விரோத போக்கினை கடைபிடித்து வரும் தமிழக அரசு இனியாவது தனது செயல்பாடுகளை மாற்றிக் கொள்ள வேண்டும்.

மேலும் சத்துணவு ஊழியர்கள் மற்றும் டாஸ்மாக் ஊழியர்கள் சங்க பிரதிநிதிகளை அழைத்து உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு செவிமடுத்து, பிரச்சினைகளுக்கு சுமூக தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு தொடர்ந்து தொழிலாளர்களின் குரல்வளையை நெறிக்கின்ற செயலில் ஈடுபட்டு வாழ்வாதாரத்தை பறித்து வருமானால் மக்கள் நீதி மய்யம் தொழிலாளர்கள் அணி சார்பில் தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்களை ஒன்று திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுப்போம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் " என்று கூறப்பட்டுள்ளது..

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Makkal Needhi Mayam angry about TN Govt Tasmac workers transfer


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->