அன்புமணி டெக்னிக்கை கையில் எடுத்த மகாராஷ்டிரா அரசு.. வெளியான அதிரடி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


இன்றுள்ள இளம்தலைமுறையினர் பெரும்பாலானோர் புகைபிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளனர். தங்களின் எதிர்காலத்தில் புகைப்பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து துளியளவும் கவலை இல்லாமல், புகைப்பழக்கத்தை மேற்கொண்டு வருகின்றனர். 

இதனால் இளம் தலைமுறையில் உள்ள இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் அதிகளவு புகைப்பழக்கத்திற்கு அடிமையாகி, இளம் வயதிலேயே தங்களின் உயிரை இழந்து வருகின்றனர். புகைப்பிடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி இராமதாஸ், அவரது ஆட்சிக்காலத்தில் புகைப்பழக்கம், மதுப்பழக்கம், குட்கா தொடர்பான பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்த உத்தரவு பிறப்பித்தார். இது தற்போது செயல்முறையில் இருக்கிறது. 

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் அரசு மற்றொரு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. இது குறித்த உத்தரவில், சிகிரெட் சில்லறைக்கு விற்பனை செய்ய கூடாது என்ற உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும், இதன் மூலமாக சிறுவர்கள் புகைப் பழக்கத்திற்கு அடிமையாகும் சூழ்நிலை மாறும் என்றும், அதிக பணம் கொடுத்து சிகிரெட் வாங்க இயலாமல், புகைப்பழக்கத்தை மறக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. 

புகை பொருட்கள் மற்றும் புகையிலை பொருட்களை மொத்தமாகவே தடை விதித்து இளம் தலைமுறையை காப்பாற்ற வேண்டும் என்று அன்புமணி இராமதாஸ் குரல் கொடுத்து வரும் நிலையில், முதற்கட்டமாக மகாராஷ்டிரா மாநிலம் எடுத்துள்ள நடவடிக்கை பாராட்டுதலுக்குரியது. இதனைப்போன்று தமிழக அரசும் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கையும் எழுந்துள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Maharashtra govt banned Retail cigarette sales


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->