கலை பற்றி தெரியாதவர்களுக்கு கலைமாமணி விருது! தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை எச்சரிக்கை! - Seithipunal
Seithipunal


இரண்டு படங்களில் நடித்து விட்டால் கலைமாமணி விருது வழங்கப்படுகிறது! உயர் நீதிமன்ற நீதிபதிகள் வேதனை! 

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சமுத்திரம் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கை தாக்கல் செய்திருந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் மூலம் தமிழ்நாடு கலை மற்றும் பண்பாட்டு துறை சார்பாக இசை, நடனம், நாடகம், நாட்டுப்புற கலைகள், ஓவியம் மற்றும் சிற்பக் கலைகள் கற்பிக்கப்படுகிறது. தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் சார்பாக ஆண்டுதோறும் சிறந்த கலைஞர்களுக்கு தமிழக அரசு கலைமாமணி விருது வழங்குகிறது. இந்த கலைமாமணி விருதுகள் 5 பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகிறது.

 தமிழக அரசு சார்பில் 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு கலை இளமை விருதும், 18 முதல் 35 வயது வரை கலை வளர்மதி விருதும், 36 முதல் 50 வயது வரை கலை சுடர்மனி விருதும், 51 முதல் 60 வயது வரை கலை நன்மணி விருதும், 61 வயதிற்கு மேற்பட்டோருக்கு கலை முதுமணி விருதும் வழங்கப்படுகிறது. இதுவரை கலைமாமணி விருது வழங்க வயதுவரம்போ, தகுதியோ, நெறிமுறையோ வகுக்கப்படவில்லை. 

கடந்த 2019-2020 ஆம் ஆண்டிற்கான கலைமாமணி விருது நிகழ்ச்சி 2021ம் ஆண்டு நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தகுதி இல்லாதவர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது. மேலும் கலைமாமணி விருது வழங்கப்பட்ட சான்றிதழில் தலைவர், செயலாளர், உறுப்பினர்களின் கையொப்பம் இல்லாமல் அவசரகதியில் வழங்கப்பட்டது. தகுதி இல்லாத நபர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டதை திரும்ப பெறக் கோரி அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே 2021 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட கலைமாமணி விருதுகளை திரும்ப பெற உத்தரவிட வேண்டும்" என தனது மனுவில் சமுத்திரம் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்யநாராயண பிரசாத் அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது அரசு சார்பில் 2019-2020ம் ஆண்டிற்கான கலைமாமணி விருது முந்தைய அரசால் வழங்கப்பட்டது என தற்போதைய திமுக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து நீதிபதிகள் கலைமாமணி விருது எதன் அடிப்படையில் வழங்கப்படுகிறது எவ்வாறு தேர்வு செய்யப்படுகிறது என கேள்வி எழுப்பினர். 

கலைமாமணி விருதுக்கான மரியாதையே இல்லாமல் போய்விட்டது. கலை பற்றிய தெரியாதவர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்படுகிறது என வேதனையுடன் தெரிவித்தனர். கலைத்துறையில் சாதனைகள் செய்ய கூடியவர்களுக்கு வழங்க வேண்டிய கலைமாமணி விருது தற்பொழுது இரண்டு படங்களில் நடித்து விட்டால் அவர்களுக்கும் வழங்கலாம் என்ற நிலை உருவாகியுள்ளது. தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் முறையாக செயல்படுவதில்லை. இதே நிலை நீடித்தால் இந்த மன்றத்தை கலைக்க நேரிடும் என நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

இதனை அடுத்து 2019 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட கலைமாமணி விருது குறித்தும், இதற்குப் பிறகு வழங்க இருக்கும் கலைமாமணி விருது குறித்தும் தமிழ்நாடு சுற்றுலா மற்றும் கலைத்துறை செயலாளர், தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்ற தலைவர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு இந்த வழக்கின் அடுத்த விசாரணை நவம்பர் 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டு உள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MaduraiHC said Kalaimamani award is given to Ineligible persons


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->