ரூ.21 கோடி வரி ஏய்ப்பு மோசடி புகார்... மதுரை சமுத்ரா பாலிமர்ஸ் நிறுவனர் கைது..! - Seithipunal
Seithipunal


போலி ரசீதுகளை சமர்ப்பித்து ரூ.21 கோடி மோசடி செய்ததாக தொழிலதிபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

மதுரை மாவட்டத்தில் உள்ள அழகப்பா நகரில் சமுத்ரா பாலிமர்ஸ் நிறுவனத்தை நடத்தி வருபவர் கனகரத்தினம். இவர் தனது நிறுவனத்தில் தயார் செய்யப்படும் பொருட்களை விற்பனை செய்யும் போது, போலியான ரசீதுகளை வைத்து ஜி.எஸ்.டி காட்டாமல் வரி ஏய்ப்பு செய்துள்ளார். 

இதனையடுத்து இது குறித்த விபரம் ஜி.எஸ்.டி ஆணையத்திற்கு தெரியவரவே, அவருக்கு சம்பன் வழங்கப்பட்டு விபரம் கேட்கப்பட்டுள்ளது. இதனால் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகிய கனகரத்தினம் ரூ.1.77 கோடி அபராத தொகையை செலுத்தியுள்ளார். 

ஆனால், அவரின் மீது குற்றம் உறுதி செய்யப்பட்டுள்ளதால் மதுரை மாவட்ட கூடுதல் நீதிபதி முன்னிலையில் சமர்ப்பிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மீதமுள்ள வரி எரிப்பு பணத்தை செலுத்தினால் ஜாமீன் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இது குறித்த தகவலை மத்திய ஜி.எஸ்.டி ஆணையகம் தெரிவித்துள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madurai Samuthra Polymers Founder Arrest tax evasion Complaint 23 December 2020


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->