பழனி கோயில் கருவறை வழக்கு - உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி.! - Seithipunal
Seithipunal


பழனி கோயில் கருவறை வழக்கு - உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி.!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழநியில் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயில் உள்ளது. இந்தக் கோயிலின் கருவறை புகைப்படங்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வழக்கறிஞர் ஒருவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு உள்ளிட்டோர் அடங்கிய அமர்வு முன்பு அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. 

அப்போது வழக்கினை விசாரணை செய்த நீதிபதிகள், பழநி கோயிலுக்குள் செல்போன்கள் கொண்டுச் செல்ல அனுமதித்தது யார்? கோயில் கருவறையினை செல்போனில் படம் எடுப்பதற்கு காரணமானவர்கள் யார் என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த இந்து அறநிலையத்துறை அதிகாரி, கோயிலுக்குள் செல்போன்கள் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளதாங்காத தெரிவித்தனர். 

இதையடுத்து, நீதிபதிகள் "திருப்பதி கோயிலுக்குள் செல்போன்கள் கொண்டு செல்வதை தடுப்பது போல் இங்கு ஏன் தடுக்க முடியவில்லை? என்றதுடன் கோயிலுக்குள் செல்போன் கொண்டு செல்பவர்களை மலையில் இருந்து கீழே இறக்கி விடும்படி உத்தரவிட்டனர்.

மேலும், கருவறையை புகைப்படம் பிடித்ததை தடுக்காமல் இருந்த கோயில் அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதற்கும் உத்தரவிட்டு, இந்த வழக்கினை செப்டம்பர் முதல் தேதிக்கு மாற்றி உத்தரவிட்டனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

madurai high court question rise of palani temple photo issue


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->