முகநூல், யூ டியூப் மற்றும் கூகுள் நிறுவனங்களுக்கு மதுரை கிளை உத்தரவு..! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டத்தை சார்ந்த பரமசிவம் என்பவர், மதுரை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இது குறித்த மனுவில், " முகநூல், யூ டியூப் மற்றும் கூகுள் போன்ற செயலிகளில் பதிவேற்றப்படும் வீடியோக்கள் வன்முறை சம்பந்தமாகவும், ஆபாசம் தொடர்பான வீடியோக்களாகவும் இருக்கிறது. 

இது போன்ற வீடியோக்கள் பதிவு செய்யப்படும்போதே கண்டறிந்து உடனடியாக வன்முறையா? அல்லது ஆபாசமா? அல்லது போலியான வீடியோவா? என்று கண்காணித்து, அவ்வாறு இருக்கும் பட்சத்தில், செயலி நிர்வாகங்கள் அதனை பதிவேற்ற விடாமல் முடக்கும் வகையில் செயல்திட்டங்களை மாற்ற வழிவகை செய்து உத்தரவிட வேண்டும். 

தற்போதுள்ள சூழ்நிலையில் இளம் பிள்ளைகள் முதல் ஆன்லைன் வகுப்புகள் என்ற பெயரில், அதிகளவில் அலைபேசியை உபயோகம் செய்து வருகின்றனர். இந்தியாவில் கட்டுப்பாடு இல்லாமல் இயங்கி வரும் சமூக வலைதளங்களால் பெண்கள், குழந்தைகள், மதரீதியான விமர்சனங்கள் என பல்வேறு சர்ச்சைகள் உருவாகிறது. மேலும், அங்கீகரிக்கப்பட்ட செய்தி சேனல்களை தவிர வேறு யாரும் செய்திகள் பதிவு செய்ய கூடாது " என்று கூறியுள்ளார். 

இது தொடர்பான மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு வந்த நிலையில், முதலில் மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இதன்போது, " பதிவேற்றம் செய்யப்படும் வீடியோக்கள் தொடர்பாக புகார் வந்தால் மட்டுமே மத்திய அரசு தலையிடும். 

முகநூல், யூ டியூப், கூகுள் போன்ற நிறுவனங்கள் தங்களின் செயலியில் பதிவேற்றம் செய்யப்படும் வீடியோ காட்சிகளை, அவர்கள் தான் தணிக்கை செய்துகொள்ள வேண்டும் " என்று வாதிடப்பட்டது. இது குறித்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த விஷயம் தொடர்பாக முகநூல், யூ டியூப், கூகுள் நிறுவனங்கள் பதில் அளிக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madurai High Court Bench Order Submit Answer to Google YouTube Facebook about Video Violent


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->