#சற்றுமுன்: நிதிச்சுமையை குறைக்க டாஸ்மாக் - மதுரை கிளை சரமாரி கேள்வியுடன், வேதனையில் எச்சரிக்கை.! - Seithipunal
Seithipunal


பிரியாணிக்கும், மதுபாட்டில் மற்றும் சில ஆயிரத்திற்கு வாக்குகளை விற்பனை செய்துவிட்டு, எப்படி நல்ல அரசியல்வாதிகளை எதிர்பார்க்க இயலும்? என மதுரை உயர்நீதிமன்ற கிளை சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.

திருநெல்வேலி வாசுதேவநல்லூர் தொகுதியை பொதுத்தொகுதியாக அறிவிக்கக்கூறி மதுரை உயர்நீதிமன்ற மனுதாக்கல் செய்யப்பட்ட நிலையில், இது தொடர்பான மனுமீதான விசாரணை இன்று நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் வந்தது. இந்த விசாரணையின் போதே, மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் தங்களின் வருத்தத்தையும், வேதனையையும் பதிவு செய்தனர்.

இது தொடர்பாக கண்டனம் தெரிவித்துள்ள மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் கூறியதாவது, " இலவச திட்டம் அறிவிக்கும் போது, அதை நிறைவேற்ற கடன் பெறுவதால் மாநிலத்தின் நிதி சுமை கூடுகிறது. 

பிரியாணிக்கும், மதுபானத்திற்கும், சில ஆயிரத்திற்கும் மக்களின் வாக்குகளை விற்பனை செய்தால், எப்படி நல்ல அரசியல்வாதிகள் உருவாகுவார்கள்?. நிதி சுமையை குறைக்க மதுக்கடைகளை அதிகரிப்பதாக காரணம் காட்டப்படுகிறது. அதனை உணர்ந்து மக்கள் செயல்பட வேண்டும். 

சமூக நலத் திட்டம் என்ற பெயரில் மக்களை சோம்பேறி ஆக்கும் வகையில் கட்சிகள் அறிவிப்பு வெளியிடுகிறது. மக்களை சோம்பேறியாக்கும் அறிவிப்புகளை வழங்கும் கட்சிகளை தேர்தல் ஆணையம் ஏன் தடை செய்யக்கூடாது?.

தேர்தலில் வெற்றி பெறும் கட்சிகள் தங்களின் தேர்தல் வாக்குறுதிகளை முறையாக நிறைவேற்றுகிறார்களா?. பிரியாணிக்கும், மதுபாட்டில் மற்றும் சில ஆயிரத்திற்கு வாக்குகளை விற்பனை செய்துவிட்டு, எப்படி நல்ல அரசியல்வாதிகளை எதிர்பார்க்க இயலும்? " என்று தெரிவித்தனர்.

மேலும், இது தொடர்பான கேள்விகளுக்கு தேர்தல் ஆணையம் பதில் அளிக்குமாறு தெரிவித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை பிரதி மாதம் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madurai High Court Bench Condemn about Manifesto Make Peoples Lazy 31 March 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->