மதுரை : பயணிகளின் உயிரை காப்பாற்றிவிட்டு., தனது உயிரைவிட்ட ஓட்டுநர் ஆறுமுகம்.!  - Seithipunal
Seithipunal


மதுரையிலிருந்து கொடைக்கானல் சென்ற அரசு பேருந்தின் ஓட்டுநர், பயணிகளின் உயிரை காப்பாற்றிவிட்டு, மாரடைப்பால் மரணமடைந்தார்.

மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து 43 பயணிகளுடன் புறப்பட்ட அரசுப் பேருந்தை ஓட்டுநர் ஆறுமுகம் என்பர் இயக்கினார். 

இந்த பேருந்து காளவாசல் அருகே சென்று கொண்டிருந்த போது. ஓட்டுனர் ஆறுமுகம் சென்ற பேருந்தை ஓட்டுநர் ஆறுமுகத்துக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

இதனை அடுத்து நெஞ்சு வலி ஏற்பட்டவுடன், பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தக் கூடாது என்று நினைத்த ஆறுமுகம் அவர்கள், உடனடியாக பேருந்தை சாலை ஓரமாக நிறுத்தினார்.

அவர் பேருந்தை நிறுத்திய உடனேயே அவருடைய உயிர் அவர் உடலை விட்டு பிரிந்தது. இதனையடுத்து பயணிகள் அளித்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு வந்த 108 ஆம்புலன்ஸ் குழுவினர், ஓட்டுநரின் உடலை கைப்பற்றி ராஜாஜி மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மாரடைப்பு வந்தபோதும், பயணிகளின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லாமல் சாமர்த்தியமாக பேருந்தை ஓரங்கட்டி நிறுத்தி விட்டு, ஓட்டுனர் ஆறுமுகம் உயிரிழந்துள்ள சம்பவம் மதுரை மக்களை மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதும் உள்ள தமிழக மக்களை பெரும் நிகழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இருந்தபோதிலும், அவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

'ஓட்டுநர் ஆறுமுகம் அவர்கள்., 43 மூன்று உயிர்களை காத்த 'கடவுள் ஆறுமுகம்' 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MADURAI GOVT BUS DRIVER ARUMUGAM DEAD IN HEART ATTACK


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->