மதுரை | 29 கிலோ வெள்ளி நகைகள் பறிமுதல்! ரயில்வே அதிகாரிகள் அதிரடி.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தேர்தலை முன்னிட்டு பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனைகள் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் சமயத்தில் வெளி மாநிலங்களில் இருந்து ரயில்கள் மூலம் பணம், தங்க நகைகள், குட்கா போன்ற பல்வேறு பொருட்கள் கடத்தும் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. 

இதனை தடுக்கும் விதமாக ரயில்வே காவல்துறையினரும் சந்தேகத்துக்குரிய வகையில் ரயிலில் பயணம் செய்பவர்களது உடமைகளை சோதனை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் மதுரையில் இருந்து செங்கோட்டை செல்லக்கூடிய ரயிலில், பயணிகள் இருவர் சந்தேகத்திற்குரிய வகையில் அமர்ந்து கொண்டிருந்தனர். 

அவர்களை பிடித்து அதிகாரிகள் விசாரணை நடத்திய போது, அவர்கள் தென்காசியை சேர்ந்த முருகன் மற்றும் சாகுல் என்பது தெரியவந்துள்ளது. 

இதனை தொடர்ந்து இருவரது பையை சோதனை செய்தபோது அதில் சுமார் 29.200 கிலோ வெள்ளி இருப்பதும் தெரியவந்துள்ளது. பின்னர் வெள்ளியை பறிமுதல் செய்த ரயில்வே காவல்துறையினர் இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். 

இதனை தொடர்ந்து, வெள்ளி நகைக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களையும் கைது செய்யப்பட்ட இருவரையும் மதுரை வணிகவரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madurai 29 kg silver jewelry seized


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->