'முக கவசத்தை கட்டாயமாக்கக்கூடாது' மனு மீதான விசாரணையில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்ற அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட கோரிக்கை மனுவை சென்னை உயர்நீதிமன்றம் அபராதத்துடன் தள்ளுபடி செய்திருக்கிறது. 

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் முயற்சியில் முகக்கவசம் கட்டாயம் என்ற அரசாணையை சுகாதாரத்துறை பிறப்பித்து இருந்தது. இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் எஸ்.வி. ராமமூர்த்தி ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார்.

இன்று இந்த மனு மீதான விசாரணை நடந்தது. அப்பொழுது, போதிய ஆய்வுகள் எதுவும் செய்யாமல் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று கூறி இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அத்துடன் இந்த மனுவை தாக்கல் செய்த நபருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madras high court judgement about mask


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->