ஆறு இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த தடை! அசம்பாவிதம் நடைபெற்றால் ஆர்எஸ்எஸ் தான் பொறுப்பு! - Seithipunal
Seithipunal


கடந்த அக்டோபர் 2ம் தேதி ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க மறுத்த காவல்துறை உத்தரவை எதிர்த்து ஆர்எஸ்எஸ் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் நவம்பர் 6ஆம் தேதி அன்று ஊர்வலத்தை நடத்த அனுமதிக்குமாறு உத்தரவிட்டது. மேலும் காவல்துறையினர் அதற்கான நிபந்தனைகளையும் வரையறைகளையும் வகுத்து அனுமதி அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. ஆனால் கடலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.

 இதனை அடுத்து ஆர்எஸ்எஸ் சார்பில் காவல் துறைக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை கடந்த நவம்பர் 2ம் தேதி நீதிபதி இளந்திரையன் அமர்வு முன்பு வந்தது. அப்பொழுது ஆர்எஸ்எஸ் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரபாகரன் "கடலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மூன்று இடங்களில் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மற்ற இடங்களில் அனுமதி வழங்கப்படவில்லை. நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்தாமல் உளவுத்துறையின் அறிக்கையை காரணம் காட்டி தமிழக அரசு தப்பிக்க பார்க்கிறது. அனைத்து தரப்பு மக்களையும் பாதுகாப்பது தான் அரசின் கடமை. அமைதியான ஊர்வலத்தை யாரும் தடுக்க முடியாது, அது ஜனநாயக உரிமை" என வாதிட்டார்.

காவல்துறையினர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் இளங்கோ "ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு தமிழகத்தில் பல்வேறு சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு மூன்று இடங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனுமதி கேட்டு உள்ள 23 இடங்களில் உள்ள கூட்டமாக நடத்திக் கொள்வதற்கு அனுமதி வழங்க காவல்துறை தயாராக இருக்கிறது. மற்ற 24 இடங்களில் சட்ட ஒழுங்கு பிரச்சனை காரணமாக அனுமதி வழங்க இயலாது" என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்பொழுது குறுக்கிட்ட நீதிபதி "கோவை தவிர மற்ற இடங்களுக்கு அனுமதி அளிப்பது குறித்து பதிவு செய்திருக்கலாமே?" என கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த காவல்துறை தரப்பு வழக்கறிஞர் "மக்களின் பாதுகாப்பே முக்கியம் என காவல்துறை கருதுகிறது. ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் வீட்டிற்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. தங்களின் உயிரை பணவையும் வைத்து நேரத்தை செலவிட்டு உளவுத்துறை தரும் தகவல்களை எவ்வாறு யூகம் அல்லது அனுமானம் என சொல்ல முடியும்" என கேள்வி எழுப்பி உளவுத்துறையின் அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர்.

இதனை அடுத்து ஆர்எஸ்எஸ் தரப்பில் "உள்ளரங்க கூட்டம் நடத்த முடியாது, பேரணிக்கு காவல்துறை அனுமதி வழங்க வேண்டும்" என திட்டவட்டமாக தெரிவித்தனர். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் உளவுத்துறை அறிக்கையை பார்த்த பிறகு மற்ற 47 இடங்களில் ஊர்வலம் நடத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டுமா வேண்டாமா என்பது குறித்து உத்தரவு பிறப்பிப்பதாக கூறி வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்தனர்.

இந்த நிலையில் இன்று மீண்டும் இந்த வழக்கானதை விசாரணைக்கு வந்தது. அப்பொழுது நீதிபதி இளந்திரையன் உளவுத்துறையின் அறிக்கையின் அடிப்படையில் கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், பல்லடம், அருமனை மற்றும் நாகர்கோயில் ஆகிய ஆறு இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த தடை விதித்தனர். இந்த இடங்களை தவிர மற்ற 44 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்திக் கொள்ள நீதிபதிகள் அனுமதி வழங்கியுள்ளனர்.

 தடை செய்யப்பட்ட ஆறு இடங்களில் நிலைமை சீரானதும் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்திக் கொள்ள சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் அனுமதி வழங்கியுள்ளார். மேலும் அணி வகுப்பின் பொழுது அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் அதற்கு ஆர் எஸ் எஸ் அமைப்பை பொறுப்பேற்க வேண்டும் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madras High Court allows RSS rally


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->