ஒருபுறம் ரெய்டு.. மறுபுறம் வழக்கு.‌. அதிரடி காட்டிய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.!! - Seithipunal
Seithipunal


சேலம் பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தராக இருக்கும் ஜெகநாதன் முறைகேடு ஆக நிறுவனங்களைத் தொடர்ந்து தொடங்கி லாபம் பெறும் நோக்கில் செயல்பட்டதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்ட நிலையில் ஜாமீனில் வெளிவந்து தற்போது சேலம் தந்தை பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தராக செயல்பட்டு வருகிறார். 

துணைவேந்தர் ஜெகநாதனுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் மீதான விசாரணை நடைபெற்று வரும் நிலையில் அதற்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெகநாதன் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தலைமையிலான அமர்வை முன்பு இன்று விசாரணைக்கு வந்த போது புலன் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் எப்படி தலையிட முடியும் என கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இந்த விவகாரத்தில் பணப்பரிமாற்றம் குறித்தான முழு விவரங்களையும் விசாரிக்க வேண்டும் என கருத்து தெரிவித்தோடு அரசு தரப்பு பதில் பானம் தாக்கல் செய்யுமாறு விசாரணையை ஒத்தி வைத்துள்ளார்.

இந்த நிலையில் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் உள்ளூர் தணிக்கை குழு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக பெரியார் பல்கலைக்கழகத்தில் உள்ள கோப்புகள் மற்றும் கணக்குகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madras hc refused stay on periyar University vice chancellor case


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?
Seithipunal
--> -->