முன்னாள் திமுக ஆபாச பேச்சாளரின் ஜாமீன் வழக்கு ஒத்திவைப்பு.!! - Seithipunal
Seithipunal


சென்னை வடக்கு மாவட்ட திமுக சார்பில் கடந்த ஜூன் 17ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில்  திமுக தலைமை நிலை பேச்சாளராக இருந்த சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும் தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினருமான நடிகை குஷ்பு குறித்து ஆபாசமான வார்த்தைகளால் அவதூறான கருத்துக்களை பேசி இருந்தார். இதற்கு பலதரப்பட்ட மக்களும் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்த நிலையில் மறுநாள் ஜூலை 18ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்த பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும், தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினருமான நடிகை குஷ்பு கடுமையாக திமுகவையும் அதன் தலைவர் மு.க ஸ்டாலினையும் விமர்சனம் செய்ததோடு நேரடியாக எச்சரிக்கை விடுத்து இருந்தார். 

இந்த செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்ற சில மணி நேரத்தில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி திமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார். மேலும் தமிழ்நாடு பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாநில தலைவர் அமர் பிரசாத் ரெட்டி இந்த விவகாரம் தொடர்பாக சென்னை மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில் சம்பவம் நடைபெற்ற கொடுங்கையூர் காவல் நிலைய போலீசார் 5 பிரிவுகளின் கீழ வழக்கு பதிவு செய்து முன்னாள் திமுக ஆபாச பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்னாள் திமுக ஆபாச பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அதில் திமுக கூட்டங்களுக்கு வரும் மக்களையம் தொண்டர்களையும் கவர்வதற்காக நகைச்சுவையுடன் பேசியதை காவல்துறை தவறாக புரிந்து கொண்டுள்ளது.

யார் குறித்து தவறாக பேசவில்லை என அந்த மனுவில் தெரிவித்திருந்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எதிர் தரப்பு விளக்கம் அளிக்க உத்தரவிட்டதோடு வழக்கின் விசாரணையை நாளை மறுநாள் ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madras court adjourns obscene speaker bail plea


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->