டீ கடையில் கிடைக்கும் நீட் தேர்வு, ஐ.ஐ.டி தேர்வு புத்தகங்கள்..தந்தை மகன் இலவச சேவை..!   - Seithipunal
Seithipunal


தேனி மாவட்டம் அல்லிநகரத்தில் உள்ள டீக்கடையில் உயர்கல்வி மாணவர்களுக்காக இலவச நூலகம் இயங்கி வருகிறது.

அல்லிநகரத்தில் அருவீ என்ற பெயரில் பால் பண்ணையுடன் கூடிய டீக்கடை நடத்தி வருபவர் ராஜேந்திரன், இவர் மகன் ஜெயசுர்சதன் கடந்த 2018 ஆம் ஆண்டு நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவ கல்லுரியில் மருத்துவ படிப்பை படித்து வருகிறார். 

இந்த நிலையில், டீக்கடை நடத்தி வரும் தந்தை ராஜேந்திரன் மற்றும் அவரது மகன் ஜெயசுர்சதன் இணைந்து நீட் தேர்வு. ஐ.ஐ.டி தேர்வு உள்ளிட்ட உயர் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவ மாணவியர்கள் பயன்பெறும் விதமாக புத்தகங்களை கொண்டு டீ கடையில் நூலகம் ஒன்றை அமைத்துள்ளனர்.

அப்பகுதி மாணவர்கள் தங்கள் ஆதார் விவரங்களை நூலகத்தில் தந்து நுலகத்திலிருந்து புத்தகங்களை எடுத்துச் சென்று பயன் பெற்று வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

library in tea shop theni


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->