குவைத்திலிருந்து மீட்கப்பட்ட தமிழர்கள் அன்புமணி இராமதாஸ் உடன் சந்திப்பு! - Seithipunal
Seithipunal


பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களை நேரில் சந்தித்த குவைத்திலிருந்து மீட்கப்பட்ட தமிழர்கள், மீட்க உதவியதற்காக நன்றி தெரிவித்தனர்.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம்  உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 20 இளைஞர்கள் குவைத்தில் வேலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு ஏமாற்றப்பட்டது குறித்தும்,  வேலை, உண்ண உணவு, தங்க இடம் இல்லாமலும், சொந்த ஊர் திரும்ப முடியாமலும் தவித்து வருவது குறித்தும் பா.ம.க.  நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அவர்கள் கடந்த ஆகஸ்ட் 28-ஆம் நாள்   ஆகஸ்ட்  24-ஆம் நாள் அறிக்கை வெளியிட்ட நிலையில், தற்போது அவர்கள் மீட்கப்பட்டுள்ளார்கள்.

இதுகுறித்து பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "குவைத்தில் வேலைக்கு சென்று  ஏமாற்றப்பட்டு, தாயகம் திரும்ப முடியாமல் தவித்துக் கொண்டிருந்த அரியலூர், கள்ளக்குறிச்சி  உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 20 இளைஞர்களை தமிழக அரசு மீட்டு தாயகத்திற்கு அழைத்து வந்துள்ளது.  தமிழக அரசின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.

குவைத்தில் தமிழக இளைஞர்கள் அனுபவித்து வரும் கொடுமைகள் குறித்து விளக்கி, அவர்களை  மீட்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த ஆகஸ்ட் 24-ஆம் நாள்  அறிக்கை வெளியிட்டிருந்தேன். 

அதைத் தொடர்ந்து தமிழக அரசு  அவர்களை மீட்டு வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. மீட்கப்பட்டு வந்த இளைஞர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு உள்ளிட்ட வாழ்வாதார உதவிகளை வழங்க  தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kuwait Tamil Labour meet Dr Anbumani Ramadoss


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->