அமமுகவின் ஆமை மூளை திட்டம்.. ராஜதந்திரம் வீணாகி, பொதுமக்கள் கொந்தளிப்பு.. காவல்துறை வலைவீச்சு.! - Seithipunal
Seithipunal


ஆர்.கே நகர் தேர்தலைப் போலவே கும்பகோணத்திலும் அமமுக பிரமுகர்கள் டோக்கன் கொடுத்து ஏமாற்றிய சம்பவம் அரங்கேறியுள்ளது. 

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் பெரிய கடைத்தெரு பட்டாச்சாரியார் தெருவில், பிரிமியம் மளிகை கடை ஏஜென்சி செயல்பட்டு வருகிறது. இந்த கடைக்கு துண்டுச்சீட்டுடன் வந்த வாடிக்கையாளர்கள், கடையின் பெயரை எழுதி கீழே ரூபாய் இரண்டாயிரம் என குறிப்பிட்டு இருந்த டோக்கனை கொடுத்து, அரசியல் கட்சியினர் பணத்திற்கு பதிலாக தங்களின் கடையில் இலவசமாக பொருட்களை வாங்குவதற்கான டோக்கனை கொடுத்துள்ளனர் என்று கூறியுள்ளனர். 

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த கடையின் உரிமையாளர் மற்றும் அதிமுக பிரமுகர் ஷேக் முகமது, தான் யாருக்கும் டோக்கன் வழங்கவில்லை என்றும், இது சம்பந்தமாக யாருக்கும் நான் வாக்குறுதி கொடுக்கவில்லை என்றும் கூறியுள்ளார். 

இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தாமதமாக டோக்கனால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த நிலையில், கூட்டம் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே சென்றது. இதையடுத்து மளிகை கடையை பூட்டி கடையின் கதவில், " வேட்பாளர்கள் கொடுத்த டோக்கனுக்கும் - எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த டோக்கனுக்கு கடை நிர்வாகம் எந்தவிதமான பொறுப்பும் ஏற்காது " என்று சுவற்றில் ஒட்டி விட்டு கடையை பூட்டி விட்டு சென்றுள்ளார். 

இந்த டோக்கன் குறித்து பொதுமக்களிடம் விசாரிக்கையில், கும்பகோணம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளருக்கு ஆதரவாக குக்கர் சின்னத்தில் வாக்களிக்க, ரூபாய் 2000 டோக்கன் வினியோகம் செய்யப்பட்டதும், வாக்களித்த மறுநாள் கடைக்கு சென்று மளிகை பொருட்களை வாங்கி கொள்ளலாம் என்றும் கூறியிருப்பது தெரியவந்தது. 

இந்த விஷயம் தொடர்பாக அமமுக மாவட்ட துணை செயலாளர் வடிவேல் வாண்டையாரிடம் விசாரிக்கையில், பிரீமியம் ஏஜென்சி மளிகை கடை பெயரில் ரூ.2000 டோக்கன் வழங்கியது அமமுக ஒன்றிய செயலாளர் பாலமுருகன் என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து தற்போது அமமுக ஒன்றிய செயலாளர் பாலமுருகனை காவல் துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலே உள்ள நிகழ்வெல்லாம் ஆமையின் மூளை மற்றும் முயலின் முட்டாள் தனத்தையும் தான் பலருக்கும் நினைவூட்டுகிறது. இதில் யார் ஆமை?, யார் முயல்? என்று மக்கள் தான் முடிவெடுக்க வேண்டும். ஓட்டுக்கு பணம் வாங்குவதே தவறு.. இதில் டோக்கனை நம்பி ஏமார்ந்து நிற்கும் மக்களின் நிலைமையை என்னவென்று விவரிப்பது......

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kumbakkonam AMMK Supporter Fake Token for Peoples Vote AMMK Police Investigation TN Election 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->