கோவையில் சாலையோரம் உள்ள குப்பைகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை! - Seithipunal
Seithipunal


கோவை: கருமத்தம்பட்டி நகராட்சியில் மொத்தம் 20 வார்டுகள் உள்ளன. அதில் 17 வது வார்டு பகுதியில் உள்ள கருமத்தம்பட்டி-புதூர் ரோட்டில் சாலையோரம் உள்ள குப்பைகள் சரியாக அகற்றபடாமல் மலை போல் குவிந்துள்ளன. 

மேலும், அந்த தெருக்களில் உள்ள நாய்கள் அங்குள்ள குப்பைகளை கிளறி போக்குவரத்து  சாலைகளில் தள்ளி விடுவதால் பிளாஸ்டிக் காகிதங்கள் காற்றில் பறந்து வந்து வாகன ஓட்டிகள் மீது விழுகிறது. 

இதனால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றன. மேலும், கருமத்தம்பட்டி-புதூர் ரோட்டில் பள்ளி ஒன்று உள்ளதால் அங்கு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு குப்பைகளில் இருந்து வீசும் துர்நாற்றத்தினால் அவர்களுக்கு தோற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.

இது குறித்து,  கருமத்தம்பட்டி நகராட்சி நிர்வாக அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலையோரம் குவிந்துள்ள குப்பைகளை அகற்ற பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kovai garbage accumulated issue


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->