பல மாதங்களுக்கு பின்னர் திறக்கப்பட்ட ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலாத்தலங்கள்.. கொண்டாட்டத்தில் மக்கள்.!! - Seithipunal
Seithipunal


கரோனா வைரஸ் தொற்றின் அச்சம் காரணமாக கொடைக்கானல் போன்ற பல சுற்றுலாத்தலங்களுக்கு மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. தற்போது 5 மாதங்களுக்கு பின்னர் நேற்று முதல் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் அனுமதி செய்யப்பட்டனர். 

மேலும், கொடைகானலிற்கு வருகை தர திண்டுக்கல் மாவட்டத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும் என்றும், வெளிமாவட்டத்தை சார்ந்தவர்கள் இ-பாஸ் பெற்று வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொடைக்கானலில் உள்ள பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, செட்டியார் பூங்கா போன்ற பகுதிகள் நேற்று திறக்கப்பட்டது. 

இதனால் மக்கள் பெரும் மகிழ்ச்சிக்கு உள்ளான நிலையில், அங்கு சென்று இயற்கையின் அழகையும், பூக்களின் வர்ண ஜாலத்தையும் கண்டு பெரும் மகிழ்ச்சிக்கு உள்ளாகினர். ஆனால், நட்சத்திர ஏரியில் சுற்றுலா பயணிகளுக்கு படகு சவாரி செய்ய அனுமதி வழங்கப்படவில்லை. 

கொடைக்கானலில் மொத்தமாக 16 சுற்றுலா தளங்கள் உள்ள நிலையில், சிட்டி வியூ, அருங்காட்சியகம், பேத்துப்பாறை, அஞ்சு வீடு அருவி, கற்குகை, ஆணை வெளி, பாம்பார் அருவி, குணா குகை, தூக்குப்பாறை, பசுமை பள்ளத்தாக்கு, மோயர் பாயிண்ட் போன்ற பகுதிகளில் சுற்றுலா பயணிகள் அனுமதி செய்யப்படவில்லை.

இதனைப்போன்று நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டிக்கு 175 நாட்களுக்கு பின்னர் சுற்றுலா பயணிகள் அனுமதி செய்யப்பட்ட நிலையில், குறைந்தளவு பயணிகள் மட்டுமே வந்திருந்தனர். சுற்றுலா பயணிகளின் வருகையால் மக்களும் பெரும் மகிழ்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kodaikanal and Ooty Tourist place open for Public Visit


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->