நடிகை குஷ்புவிற்கு ஆப்ரேஷன்! அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட பரபரப்பு தகவல்! - Seithipunal
Seithipunal


தமிழ் திரை உலகின் முன்னணி நடிகையாக இருந்தவரும், பாஜக நிர்வாகியுமான நடிகை குஷ்புவிற்கு முதுகு தண்டுவட பகுதியில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

பாஜக நிர்வாகியும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும் ஆன நடிகை குஷ்பு, சென்னை கிரீன் சாலைகள் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று திடீரென சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

இந்நிலையில், இது குறித்த ஒரு புகைப்படத்தை நடிகை குஷ்பு தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். 

அவரின் அந்த பதிவில், அவருக்கு இடுப்பு எலும்பிற்காக சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், முழுமையாக குணமாகும் என்று நம்புகிறேன் எனவும் சஅந்த பதிவில் நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, நடிகை குஷ்பவிற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு நலமுடன் இருப்பதாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் விரைவில் நடிகை குஷ்பு வீடு திரும்ப உள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

khushbu heath report june 24


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->