இனி செல்லலாம், தமிழக பேருந்துகளுக்கு அனுமதி! உயர்நீதிமன்றம் விடுத்த அதிரடி உத்தரவு! - Seithipunal
Seithipunal


கேரளா சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜைக்காக கோவில் நடை திறந்துள்ளது.இதனால் தமிழகம் மற்றும் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு சென்று வருகின்றனர்.

இவ்வாறு சபரிமலைக்கு விரதம் இருந்து, இருமுடிக்கட்டி செல்லும் பக்தர்கள் கார், வேன், பஸ் போன்ற வாகனங்களில் செல்வர். சில பக்தர்கள் நடைபயணமாக சபரிமலை கோவிலுக்கு செல்வார்கள்.

      

இந்நிலையில் கேரளாவில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் 10 முதல் 50 வயதிற்குட்பட்ட அனைத்து வயது பெண்களுக்கு செல்லலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததை தொடர்ந்து பெண்கள் பலரும் கோவிலுக்குள் செல்ல முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனால் இதற்கு  பல இந்து அமைப்புகளும், கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் கோவிலுக்கு வரும் பெண்களை தடுத்து ஐயப்ப பக்தர்கள் பலரும் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அதனையும் மீறி இருபெண்கள் கோவிலுக்குள் சென்று தரிசனம் செய்தததால் கேரளவே கலவரமுகியாக மாறியுள்ளது. இதன் காரணமாக பக்தர்களின் வாகனங்கள் நிலக்கல்லுடன் நிறுத்தப்படுகிறது. மேலும் அங்கிருந்து கேரள அரசு பஸ்கள் மூலமே பக்தர்கள் பம்பை வரை செல்ல முடிகிறது.

மேலும் முன்பு இத்தகைய காலகட்டங்களில் தமிழக அரசு பேருந்துகளும், சபரிமலை பம்பை வரை சென்று வந்தது.ஆனால் இந்த ஆண்டு தமிழக பேருந்துகள்  நிலக்கல் வரை செல்ல மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. 

   

இதனை எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கேரள அரசு போக்குவரத்து கழகத்துக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் அதனை கேரளா அரசு ஏற்காத நிலையில் இதுகுறித்து கேரள உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் தமிழக அரசு பஸ்களை பம்பை வரை இயக்க அனுமதி அளித்து  உத்தரவிட்டுள்ளது. 


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kerala highcour allow tamilnadu bus to pampai kerala


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->