கோவை: பப்ஜி காதலனை நம்பி சென்ற பெண் வங்கி அதிகாரி பாலியல் பலாத்காரம்..! அறையெடுத்து சம்பவம்.! - Seithipunal
Seithipunal


பப்ஜி கேமில் அறிமுகமாகிய நபரை நம்பி சென்ற பெண்மணி, காதல் போர்வையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சோகம் அரங்கேறியுள்ளது.

கேரள மாநிலத்தில் உள்ள எர்ணாகுளம் பகுதியை சார்த்த 24 வயது இளம்பெண், கோயம்புத்தூரில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்த புகாரில், " எனக்கு பூர்வீகம் கேரள மாநிலம். 

கேரளாவில் உள்ள வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறேன். பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்றதும், பப்ஜி விளையாடும் பழக்கத்தை வைத்திருந்தேன். அவ்வாறாக பப்ஜி விளையாடும் போது வாலிபர் ஒருவரின் அறிமுகம் கிடைத்தது. 

அங்குள்ள இடக்கொச்சி பகுதியை சார்ந்த ஹரிஷ் (வயது 25) என்பவரின் அறிமுகம் கிடைத்தது. இருவரும் ஒன்றாக பப்ஜி விளையாடி வந்த நிலையில், ஒருநாள் எனது அலைபேசியை வாங்கினார். பின்னர் இருவரும் அவ்வப்போது பேசி வந்தோம். 

இந்நிலையில், சம்பவத்தன்று என்னை தொடர்பு கொண்ட ஹரிஷ் கோவையில் உள்ள நண்பரை சந்தித்துவிட்டு வரலாம் என தெரிவித்தார். நான் முதலில் வரமறுத்த நிலையில், பேசியே என்னிடம் சம்மதம் வாங்கினார். பின்னர் இருவரும் கேரளாவில் இருந்து பேருந்து மூலமாக கோயம்புத்தூரில் உள்ள காந்திபுரத்திற்கு சென்றோம். 

அங்குள்ள விடுதியில் அறையெடுத்து 2 நாட்கள் தங்கிய நிலையில், என்னிடம் ஆசை வார்த்தை கூறி என்னை பாலியல் பலாத்காரம் செய்தான். இதன்பின்னர், இருவரும் கேரளாவுக்கு சென்றுவிட்ட நிலையில், ஊருக்கு சென்ற சில நாட்களுக்கு பின்னர் என்னுடன் பேசுவதை ஹரிஷ் தவித்து வந்தான். 

இதனையடுத்து ஏமாற்றப்பட்டதை உணர்ந்து, கேரள மாநிலத்தில் உள்ள பல்லுருத்தி காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, அவர்கள் விசாரணை செய்து சம்பவம் நடைபெற்ற இடம் கோவை என்பதால், அங்கு சென்று புகார் அளிக்க சொன்னார்கள். என்னை ஏமாற்றிய ஹரிஷின் மீது நீங்களாவது தகுந்த நடவடிக்கை எடுங்கள் " என்று தெரிவித்துள்ளார். இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர் காமுகனை தேடி வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kerala Ernakulam PUBG Love girl Cheated by Drama Lover Culprit Police Investigation


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->