கரூர் - பஞ்சமாதேவி நீர்ப்பாசன வாய்க்கால் குப்பைகளால் சூழப்பட்டுள்ள சோகம்.. சீரமைக்க கோரிக்கை.! - Seithipunal
Seithipunal


கரூர் மாவட்டத்தில் உள்ள பஞ்சமாதேவி பாசன வாய்க்காலில் அதிகளவு பிளாஸ்டிக் கழிவுகள் நிறைந்துள்ளது. இதனை சுத்தப்படுத்தி சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பஞ்சமாதேவி வாய்க்கால் மூலமாக 5 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது குறிப்பிடத்தக்கது.

கரூர் - நெரூர் சாலையில் உள்ள பஞ்சமாதேவி கிராமத்தின் வழியே, பல்வேறு பாசன நிலங்களுக்கு செல்லும் வாய்க்கால்கள் இருக்கிறது. இந்த வாய்க்காலில், ஒரு வாய்க்கால் மட்டும் பல மாதமாக தூர்வாரப்படாமல் முட்புதர்கள் வளர்ந்து காணப்படுகிறது. 

மேலும், அதிகளவு பிளாஸ்டிக் குப்பைகள் சேர்ந்து மோசமான நிலையில் காணப்படும் நிலையில், விவசாயத்திற்கு தேவையான நீர் கிடைக்க அரசு அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு பாசன நீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karur Water Canal Drain Line Cleaning Request by Farmers


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->