விடுமுறைக்கு வந்த இராணுவ வீரருக்கு அரங்கேறிய சோகம்.. கண்ணீரில் குடும்பத்தினர்.!! - Seithipunal
Seithipunal


கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை வளையப்பட்டி பகுதியை சார்ந்தவர் பார்த்தசாரதி (வயது 35). இவர் இராணுவ வீரராக இருந்து வரும் நிலையில், உத்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள மதுராவில் பணியாற்றி வந்துள்ளார். இவர் தற்போது விடுமுறையில் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். 

இந்த நிலையில், நேற்று தனது இல்லத்தில் இருந்து பக்கத்து ஊரான பணிக்கம்பட்டி பகுதிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அங்கு பணியை முடித்துவிட்டு மீண்டும் இல்லத்திற்கு திரும்பியுள்ளார். இந்த நிலையில், வளையப்பட்டி - பணிக்கம்பட்டி சாலையில் வந்த போது, முன்னாள் சென்று கொண்டு இருந்த டிராக்டர் திடீரென நின்றுள்ளது. 

டிராக்டரில் பின்னால் சென்று கொண்டு இருந்த பார்த்தசாரதி டிராக்டரில் மோதவே, படுகாயமடைந்து உயிருக்கு போராடியுள்ளார். இவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்துள்ளனர். 

குளித்தலை மருத்துவமனையில் முதலுதவி செய்யப்பட்டு, மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதி செய்யப்ட்டுள்ளார். அங்கு நேற்றிரவு சிகிச்சை பலனின்றி பார்த்தசாரதி பரிதாபமாக பலியாகியுள்ளார். 

இவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், இந்த விஷயம் தொடர்பாக குளித்தலை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பார்த்த சாரதிக்கு சித்ராதேவி என்ற மனைவி, கமலினி என்ற மகள் மற்றும் கோகுலேஷ் என்ற மகன் இருக்கின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karur army man died accident when spend Holiday in Native


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->