மிக்ஜம் புயல் எதிரொலி: 'கலைஞர் 100' விழா ஒத்திவைப்பு! - Seithipunal
Seithipunal


தி.மு.க தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் நூற்றாண்டு விழா தி.மு.க சார்பில் கொண்டாடப்படுகிறது. 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் 'கலைஞர் 100 விழா' பிரம்மாண்டமாக கொண்டாடப்பட வேண்டும் என முடிவு செய்யப்பட்டு அதற்கான ஒப்புதல் பெறப்பட்டது. 

அதன் அடிப்படையில் தமிழ் சினிமா வளர்ச்சியில் கருணாநிதியின் பங்களிப்பை போற்றும் வகையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் பிரம்மாண்டமாக கலைஞர் 100 விழா நடைபெற உள்ளது. 

இதில் ரஜினி, கமல் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் வருகின்ற 24-ஆம் தேதி நடைபெற இருந்த கலைஞர் 100 விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

மேலும் இந்த விழா அடுத்த ஆண்டு ஜனவரி 6 ஆம் தேதி நடைபெறும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. மிக்ஜம் புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளை கருத்தில் கொண்டு 'கலைஞர் 100 விழா' தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

karunanidhi 100th year celebration


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->