மதுக்கடைகளை மூடிடாதீங்க.- கார்த்தி சிதம்பரத்தின் கருத்தால் எழுந்த சர்ச்சை.!  - Seithipunal
Seithipunal


டாஸ்மாக் கடைகளை சென்னையில் திறக்க எதிர்ப்பு உருவாகி இருக்கின்ற நிலையில், காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் டாஸ்மாக்கை மூடக் கூடாது என்று தெரிவித்துள்ளது கடுமையான கண்டனங்களை பெற்று வருகின்றது. 

கொரானா வைரஸ் தொற்று சென்னையில் மிகவும் குறைந்து விட்டதாக கூறப்படுகிறது. வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கையானது ஆயிரத்திற்கு கீழ் சென்றது. தற்போது மீண்டும் ஆயிரத்தை தாண்டி இருக்கின்றது. இருப்பினும், சென்னையில் கொரோனாவின் தாக்கம் குறைந்து விட்டது என்று தெரிவிக்கப்படுகிறது. 

இதனை காரணமாகக் கொண்டு நாளை முதல் சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்று அரசு தெரிவித்த நிலையில், கொரோனா தொற்று முற்றிலும் குறையாத நிலையில், தமிழக அரசின் இந்த அறிவிப்பு மோசமான செயல் என்று பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில் சிவகங்கை தொகுதி எம்பி கார்த்தி சிதம்பரம் தனது கருத்து ஒன்றில், மதுக்கடைகளை மூட வேண்டாம் என்றும், மாறாக ஆன்லைனில் மது விற்பனையைத் தொடங்கலாம் என்றும், அனைவரும் மதுக்கடைகளை திறக்க கோரிக்கை வைத்து வரும் நிலையில் மதுகடைகளை மூட வே கூடாது என்றும் கூறியிருக்கின்றார். இவரது இந்த கருத்திற்கு பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் எழுந்து வருகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karthi chidhambaram speech about Tasmac 


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->