சொந்த பிரச்சனையை ஊர் பிரச்சனையாக கொளுத்திவிட்ட பெண்.. வைரலான விடியோவால் வீடு தேடி சென்ற வம்பு.! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பூதப்பாண்டி நரிப்பாளையம் கிராமத்தைச் சார்ந்த பெண்மணி சுபலா. இவர் கடந்த 2 தினங்களுக்கு முன்னதாக 50 குடும்பங்கள் கொண்ட தங்களது கிராமத்தில், எங்களுக்கு எந்தவிதமான அரசின் உதவிகளும் கிடைக்கவில்லை என்று வீடியோ பதிவை வெளியிட்டார். 

மேலும், தங்களது கிராமத்திற்கு சாலை மட்டும் போட்டுக் கொடுத்து இருப்பதாகவும், அப்பகுதியில் உள்ள குப்பை கிடங்கை அவ்வப்போது அதிகாரிகள் வந்து பார்த்து செல்வதால், அவர்களின் வசதிக்காக அவை போடப்பட்டுள்ளது என்றும், ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து 6 மாதமாகியும் வரவில்லை என்றும், 

மளிகை பொருட்கள் வாங்க கூட ஊரைவிட்டு வெளியே சொல்லக்கூடாது என்று ஊரடங்கு போட்டுள்ளதால், நாங்கள் பெரிதும் அவதிப்படுகிறோம் என்றும், ஓட்டு கேட்டு வந்தவர்கள் உதவிக்கு வரவில்லை என்றும் கூறியுள்ளார். 

இந்நிலையில், பெண்ணின் முகவரியை தேடி அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் சென்ற நிலையில் அங்கு வந்தவர்கள் அவரை கடுமையாக மிரட்டி சென்றதாக கூறப்படுகிறது. இதனால் பெரும் பாதிப்புக்கு உள்ளான சுபலா, தனது குடும்பத்துடன் தற்கொலை செய்து போவதாக இரண்டாவது வீடியோ வெளியிட்டுள்ள நிலையில், அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் தங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று வீடியோ பதிவிட்டதாகவும் கூறியுள்ளார். 

இந்த விஷயம் தொடர்பாக விசாரிக்கையில், சுபலா தன்னைப்போல ஒரு சிலரின் பிரச்சனையை ஊரின் ஒட்டுமொத்த பிரச்சனையாக பேசி வீடியோவில் கூறியதால், உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் சத்தம் விட்டதாகவும் கூறப்படுகிறது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kanyakumari Woman WhatsApp Trending video Politician Angry 5 June 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->