யாசக தொகையை முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு அனுப்பிய முதியவர்.!! - Seithipunal
Seithipunal


யாசகம் பெற்ற தொகையை சமூக சேவகர் பாராட்டு சான்றிதழ் பெற்ற முதியவர் முதல்வரின் நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நாதன்கிணறு கிராமத்தை சார்ந்த முதியவர் பூல் பாண்டி (வயது 80). இவருக்கு ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். முதியவர் பூல் பாண்டியை குடும்பத்தினர் கைவிட்ட நிலையில், வேறு வழியின்றி வயிற்று பிழைப்புக்காக யாசகம் பெற்று பிழைப்பு நடத்தி வருகிறார். யாசகம் பெற்று கிடைக்கும் வருவாயில் தனது தேவையை பூர்த்தி செய்து, மீதமுள்ள பணத்தை ஊர்களில் இருக்கும் பள்ளிக்கூடத்துக்கு வழங்குகிறார். 

மேலும், பள்ளிகளுக்கு தேவையான உபகரணத்தை நேரில் சென்று வாங்கிக்கொடுத்து பள்ளிகளின் தரத்தை உயர்த்த பாடுபட்டு வருகிறார். இவ்வாறாக யாசகம் பெற பல ஊர்களுக்கு செல்லும் முதியவர், அந்தந்த ஊர்களில் கிடைக்கும் பணத்தை, அதே ஊரில் உள்ள பள்ளிகளுக்கு வழங்கிவிட்டு வந்துவிடுவார். 

முதியவர் பூல் பாண்டியின் சேவையை பாராட்டி மதுரை மாவட்ட ஆட்சியர் சிறந்த சமூக சேவகருக்கான பாராட்டு சான்றிதழையும் வழங்கியுள்ளார். இந்நிலையில், தற்போது திசையன்விளை பகுதிகளில் யாசகம் பெற்ற ரூ.10 ஆயிரம் பணத்தை, பள்ளிகள் திறக்கப்படாத காரணத்தால் வங்கி மூலமாக முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்துள்ளார்.

முதியவர் பூல் பாண்டி தற்போது வரை ரூ.4 இலட்சத்து 50 ஆயிரம் பணத்தை வழங்கி இருப்பதாகவும் அவர் தெரிவிக்கிறார். பிள்ளைகள் வயது மூப்பால் கைவிட, யாசகம் பெற்று பள்ளிகளுக்கு தேவையான உதவியை செய்து, அதன் தரத்தை உயர்த்த பாடுபடும் முதியவருக்கு ராயல் சல்யூட்..


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kanyakumari Thisayanvilai Aged Beggar Man PoolPandi Give Money to TN CM Corona Fund


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->