பூசாரிகள் முகத்தில் பயம்! ஆளுநரின் குற்றச்சாட்டில் திடீர் திருப்பம்!  - Seithipunal
Seithipunal


தமிழக ஆளுநர் தனது சமூகவலைத்தள பக்கத்தில், "இன்று காலை  சென்னை, மேற்கு மாம்பலம் அருள்மிகு கோதண்டராமர்  திருக்கோயிலுக்குச் சென்று, அனைவரும் நலம்பெற பிரபு ஸ்ரீராமரிடம் பிரார்த்தனை செய்தேன். இந்த கோயில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ்  உள்ளது.

பூசாரிகள் மற்றும் கோயில் ஊழியர்களின் முகங்களில் கண்ணுக்குப்  புலப்படாத பயம் மற்றும் மிகப்பெரிய அச்ச உணர்வு இருந்தது. நாட்டின் பிற பகுதிகளில் கொண்டாடப்படும்  பண்டிகை சூழலுக்கு முற்றிலும் அது மாறுபட்டிருந்தது. பால ராமர் பிராண பிரதிஷ்டையை நாடு முழுவதும் கொண்டாடும் போது, அக்கோயில் வளாகம், கடுமையான அடக்குமுறையின் உணர்வை வெளிப்படுத்துகிறது" என்று ஆளுநர் ரவி தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், சென்னை மேற்கு மாம்பலம் கோதண்டராமர் கோவிலில் அடக்குமுறை எதுவும் நடக்கவில்லை என்று, கோவில் ஊழியர் தெரிவித்துள்ளார்.

பூசாரிகள் முகங்களில் அச்சம் இருந்ததாக ஆளுநர் கூறியதற்கு, கோவில் ஊழியர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும், ஆளுநரின் பாதுகாப்பை பின்பற்றி அவருக்கு முறையான வரவேற்பை அளித்தோம் என்றும் கோவில் ஊழியரான மோகன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kanjipuram temple staff say about Governor Ravi statement


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->