அரசுக்கு சொந்தமான  இடத்தில் கஞ்சா செடிகள்.. போலீசார் வலை வீச்சு.. திடுக்கிடும் தகவல்..! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின், திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 50-வது வட்டத்தில் உள்ள தென்னூர் ஆழ்வார் தோப்பு அக்பர் தெருவில் மாநகராட்சிக்கு சொந்தமான சுமார் 10 ஆயிரம் சதுர அடி நிலம் உள்ளது. 

அந்த இடத்திற்கு சரியான பராமரிப்பு இல்லாத காரணத்தால், தற்போது அந்த இடத்தில், மது அருந்த பயன்படுத்தி வருவதாக போலீசுக்கு தகவல் சென்றது. மேலும் இங்கு சிலர்  கஞ்சா செடியை வளர்த்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதை தொடர்ந்து, சம்பவ இடத்துக்குச் சென்ற  தில்லை நகர் காவல் நிலைய போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் 4,5 அடி உயரத்தில் 20-க்கும் மேற்பட்ட கஞ்சா செடிகள் வளர்ந்திருந்தது.

மேலும் புதருக்குள் 100ற்கும் மேற்பட்ட கஞ்சா செடிகள் 1 அடி  உயரத்திற்கு வளர்ந்திருந்தது. இதை தொடர்ந்து ஜே.சி.பி இயந்திரங்களைக் கொண்டு அவை அனைத்தும் நீக்கப்பட்டது.

இந்த செடிகள் இங்கு தானாக வளர வாய்ப்பில்லை என்பதால், செடிகளை வளர்த்தது யார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kanja in government owned place


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->