ஒடிசா மாநில ரெயில் விபத்தால் கலைஞர் பிறந்தநாள் பொதுக்கூட்டம் ரத்து.! - Seithipunal
Seithipunal


ஒடிசா மாநில ரெயில் விபத்தால் கலைஞர் பிறந்தநாள் பொதுக்கூட்டம் ரத்து.!

கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரெயில் ஒடிசா மாநிலத்தில் உள்ள பாலசோர் மாவட்டத்தில் பஹானாகா ரெயில் நிலையம் அருகே, நேற்று இரவு எதிர்பாராதவிதமாக சரக்கு ரெயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. 

அப்போது பெங்களூருவில் இருந்து கொல்கத்தா நோக்கி சென்றுகொண்டிருந்த யஸ்வந்த்பூர் ஹவுரா விரைவு ரெயில், விபத்துக்குள்ளான ரெயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. மொத்தம் மூன்று ரெயில்கள் ஒரே நேரத்தில் விபத்துக்குள்ளானதில் பல பயணிகள் சிக்கி படுகாயமடைந்துள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர், மாநில பேரிடர் மீட்பு படையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அனைவரும் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 233 ஆக உயர்ந்துள்ளது என்றும், 900 பேர் படுகாயமடைந்து உள்ளதாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில், தமிழகம் முழுவதும் இன்று நடைபெற இருந்த கலைஞர் பிறந்த நாள் பொதுக்கூட்டம் ஒடிசா ரயில் விபத்து காரணமாக ரத்து செய்யப்படுவதாகவும், கலைஞர் நினைவிடம், சிலைக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி மட்டுமே  நடக்கும் என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kalaingar birthday public meeting cancelled in tamilnadu for odisa train accident


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->