படத்தை வெளியிட்ட தியேட்டர்களுக்கு 50 ஆயிரம் அபாரம்! கடம்பூர் ராஜுவின் அதிரடி அறிவிப்பால் அதிர்ச்சியில் திரையரங்குகள்! - Seithipunal
Seithipunal


பொங்கல் கொண்டாட்டத்தை முன்னிட்டு,  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட மற்றும் அஜித்தின் விஸ்வாசம் ஆகிய படங்கள் இன்று வெளியானது. மேலும் இருதிரைப்படங்களும் தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் போட்டி போட்டுக்கொண்டு திரையிடப்பட்டது.

மேலும் பல திரையரங்குகளில் சிறப்புக்காட்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

படக்குழுவினர் மட்டுமின்றி இரு நடிகர்களின் ரசிகர்களும் போட்டி போட்டுக்கொண்டு உற்சாகத்துடன் திருவிழாவை போல கொண்டாடி திரைப்படத்தை வரவேற்றனர்.

இந்நிலையில்,செய்தியாளர்களிடம் பேசிய  அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறுகையில், பல தியேட்டர்களில் பேட்ட மற்றும் விஸ்வாசம் திரைப்படங்களை வெளியிட, சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இருப்பினும் திரைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. 

இவ்வாறு அனுமதியின்றி சிறப்பு காட்சி ஒளிபரப்பிய தியேட்டர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது

மேலும் அத்தகைய தியேட்டர்களுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.

 

English Summary

kadampur raju announced about 50 lakhs benality for theatre


கருத்துக் கணிப்பு

புதிய கல்வி கொள்கை குறித்த நடிகர் சூர்யா கருத்து?
கருத்துக் கணிப்பு

புதிய கல்வி கொள்கை குறித்த நடிகர் சூர்யா கருத்து?
Seithipunal