விடியா அரசுக்கு நன்றி! -ஜெயக்குமார்! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவுவை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அதிமுக சார்பில் சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடத்த அறிவிக்கப்பட்டது. காவல்துறை சட்ட ஒழுங்கை காரணம் காட்டி அனுமதி வழங்கவில்லை. இந்த நிலையில் தடையை மீறி அதிமுகவினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த போராட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் கே.பி முனுசாமி, செங்கோட்டையன், அரக்கோணம் ரவி, உதயகுமார், தங்கமணி, கோவிந்தசாமி உள்ளிட்ட எம்எல்ஏக்கள் பங்கேற்றனர். தடையை மீறி உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுக எம்எல்ஏ.,க்களை போலீசார் கைது எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தின் காரணமாக தமிழக முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் அதிமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து அதிமுக பிரமுகர்களையும் நிர்வாகிகளையும் காவல்துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர். கைது செய்யப்பட்ட அதிமுக நிர்வாகிகளை நேற்று மாலை காவல்துறையினர் விடுவித்தனர்.

இந்த நிலையில் சென்னையில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திமுக அரசிற்கு நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் "விடியா அரசுக்கு நன்றி... உண்ணாவிரதத்திற்கு அனுமதி கொடுத்திருந்தால் வள்ளுவர் கோட்டத்தில் கூடி எங்கள் எதிர்ப்பை காட்டி நாங்களே கலைந்து சென்று இருப்போம். ஆனால் தடை விதிக்கிறோம்... கைது செய்கிறோம்... என்று நாடகம் ஆடி எங்கள் போராட்டத்தை தமிழ்நாட்டு மக்கள் அனைவரிடமும் எடுத்துப் போனது மட்டுமில்லாம அதிமுகவின் பலம் என்ன என்று காட்டுவதற்கு உதவி செய்த விடிய அரசுக்கு நன்றி" என பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jayakumar thanked the DMK government


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->