பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல்.. ராமேஸ்வரத்தில் குவிக்கப்பட்ட போலீஸ்.!!
intelligence alert for rameswaram temple
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில், இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இத்தளத்தில் ராவணனைக் கொன்ற பாவம் தீர ராமர் வழிபட்டார். காசி, ராமேஸ்வரம் யாத்திரை செல்பவர்கள் முதலில் இராமேஸ்வரத்தில் அக்னி தீர்த்தத்தில் நீராடி, மணல் மற்றும் தீர்த்தம் எடுத்துக்கொண்டு, காசி சென்று கங்கை தீர்த்தத்தில் மணலை போட்டுவிட்டு, காசி விசுவநாதருக்கு அக்னி தீர்த்த அபிஷேகம் செய்து, காசியிலிருந்து கங்கை தீர்த்தம் எடுத்து வந்து ராமநாதருக்கு அபிஷேகம் செய்து வருகின்றனர்.
இதன் மூலம் இந்த கோவில் இந்தியா முழுவதும் பிரபலமானதாக உள்ளது. இதனால், அதிகளவில் பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதனிடையே, ராமநாதசுவாமி கோவிலில் பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் உள்ளதால், கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக கோவிலின் நான்கு வாசலிலும் 24 மணி நேரமும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் ராமேஸ்வரம் கோவிலில் கடந்த சில நாட்களாக தற்போது இருப்பதை விட கூடுதலாக காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக கோவிலின் கிழக்கு வாசல் பகுதியில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு உள்ளிட்ட காவல்துறையினர் கூடுதல் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், அனைத்துப் பிரகாரங்களிலும் காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் கோவில் மேல் பகுதி மற்றும் ரத வீதிகளில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டும், கேமராக்கள் மூலமாகவும் கண்காணித்து வருகின்றனர்.
English Summary
intelligence alert for rameswaram temple