தமிழகத்தில் அரிசி, கோதுமை பற்றாக்குறை - இந்திய உணவுக்கழகம் தகவல்.! - Seithipunal
Seithipunal


இந்திய உணவு கழகத்தின் சென்னை மண்டல அலுவலகம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவித்துள்ளதாவது:- "ஆவடி மற்றும் எழும்பூரில் இந்திய உணவுக் கழகத்தின் சென்னைப் பிரிவின் கீழ், 1.9 லட்சம் மெட்ரிக் டன் சேமிப்பு திறன் கொண்ட உணவு தானிய சேமிப்பு கிடங்குகளும், எலாவூரில் 0.25 மெட்ரிக் டன் சேமிப்பு திறன் கொண்ட நிலையம் உள்ளது. 

இந்தக் கிடங்குகள் மூலம், சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஒரு வருட தேவைக்கும், மேலான உணவு தானியம் கையிருப்பு வைக்கப்பட்டுள்ளது. அரிசி மற்றும் கோதுமை கொள்முதலில் தமிழ்நாடு பற்றாக்குறை மாநிலமாக உள்ளது. 

இந்த பற்றாக்குறையை சமாளிப்பதற்கு, பஞ்சாப், ஹரியானா, ஆந்திரா, தெலங்கானா, சத்தீஸ்கர் மற்றும் ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து அரிசி மற்றும் கோதுமை ரயில் மற்றும் சாலை போக்குவரத்து மூலம் பெறப்படுகிறது. 

மேலும், பிரதமரின் இலவச உணவு பொருள் திட்டத்தின் கீழ் இந்திய உணவுக் கழக சென்னைப் பிரிவு, 1.9 லட்சம் மெட்ரிக் டன் அரிசி மற்றும் 0.17 மெட்ரிக் டன் கோதுமையை வழங்கியது.

இந்த திட்டத்தின் கீழ் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள 24 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் மாதம் தோறும் பயன் பெறுகின்றனர். என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

indian Food Corporation information rice and Wheat shortage in tamilnadu


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->