விடிய விடிய தொடரும் சோதனை..!! "திமுக எம்எல்ஏ வீட்டில் சிக்கியது என்ன? வருமானவரித்துறையின் அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும்?! - Seithipunal
Seithipunal


சென்னையை தலைமை இடமாகக் கொண்டு தென்னிந்திய மாநிலங்களில் செயல்படும் ஜி ஸ்கொயர் நிறுவனம் மற்றும் அதன் தொடர்புடைய நிறுவனத்தின் அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் நேற்று காலை 6:30 மணி முதல் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனையானது நடைபெற்று வருகிறது. இரண்டாவது நாளாக தொடரும் இந்த வருமான வரி சோதனையில் அண்ணா நகர் திமுக சட்டமன்ற உறுப்பினர் மோகன் மற்றும் அவருடைய மகன் கார்த்திக் சொந்தமான இடங்களிலும் இரண்டாவது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

அண்ணா நகரில் அமைந்துள்ள திமுக எம்எல்ஏ மோகன் வீட்டில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறை சோதனை விடிய விடிய நடைபெற்று வருகிறது. திமுக எம்எல்ஏ மோகனின் மகன் கார்த்திக் ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் பங்குதாரராக இருப்பதால் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

இன்று காலை 9 மணி அளவில் வருமானவரித் துறையின் மண்டல அதிகாரிகள் 3 பேர் திமுக சட்டமன்ற உறுப்பினர் மோகன் வீட்டிற்கு இரண்டாவது நாள் சோதனையில் ஈடுபட வந்துள்ளனர். அண்ணா நகரில் அமைந்துள்ள வீட்டின் இரண்டு தளங்கள், திமுக சட்டமன்ற உறுப்பினர் மோகன் பயன்படுத்தக்கூடிய இரண்டு கார்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். 

இந்த நிலையில், திமுக எம்எல்ஏ மோகன் வீட்டில் வருமானவரித்துறையினர் ஆவணங்கள் ஏதேனும் கைப்பற்றி உள்ளனரா? என்பது குறித்த அதிகாரப்பூரவ செய்தி எதுவும் வெளியாகிவில்லை. இருப்பினும் இன்று இரண்டாவது நாள் சோதனையில் மண்டல அதிகாரிகள் ஈடுபட வந்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

வரி ஏய்ப்பக்கான ஆதாரங்கள் ஏதேனும் சிக்கினால், சோதனையின் முடிவில் கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க்கள் மற்றும் லேப்டாப்புகளை வருமான பரிந்துரை அதிகாரிகள் ஆய்வுக்கு உட்படுத்துவது வழக்கம். தற்போதுவரை அப்படியான எந்த தகவலும் வெளியாகிவில்லை.

அதே சமயத்தில் முறைகேடு ஏதேனும் கண்டுபிடிக்கப்பட்டால் சம்மந்தப்பட்டவர்கள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டிய சூழல் உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் கூட டெல்லி முதலமைச்சர் சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி விளக்கமளித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Income tax searching continues for 2nd day at DMK MLA Mohan house


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->