போலீஸ் வந்தாங்க.. எல்லாரும் தப்பிக்க முயற்சித்தோம்..! திடீரென வழுக்கியதால்.... நடந்த தரமான சம்பவம்.!!  - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் மொத்தமாக 19 கொடூர கொலைகள் அரங்கேறியுள்ளது. இதனையடுத்து காவல் துறையினர் குற்றத்தடுப்பு நடவடிக்கையை கடுமையாக தீவிரப்படுத்த துவங்கினர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் காவல் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு., 24 மணிநேர வாகன சோதனையும் நடைபெற்று வருகிறது. 

மேலும்., சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் உள்ள நபர்களை பட்டியலிட்டு கைது செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த தருணத்தில்., அங்குள்ள சிவந்தகுளம் சாலையில் அதிவேகமாக சென்ற நபர்களை எச்சரிக்கை செய்த கப்பல் பொறியாளர் முருகேசன் மற்றும் அவரது நண்பரை கொடூரமாக கொலை செய்த கும்பலை காவல் துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். 

died, murder, killed, suicide attempt, கொலை, தற்கொலை, குற்றம்,

இந்த வழக்கில்., சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அங்குள்ள பகுதியில் பதுங்கியிருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து., சமப்வ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் குற்றவாளிகளை கைது செய்ய முற்பட்டனர். காவல் துறையினரின் வருகையை கவனித்த குற்றவாளிகள்., காவல் துறையினரிடம் இருந்து தப்பிக்க இரு சக்கர வாகனத்தை எடுத்துச்செல்ல முயற்சித்துள்ளனர். 

இந்த சமயத்தில்., இவர்களின் வாகனம் எதிர்பாராத விதமாக சறுக்கி நிலைசாய்ந்து விழவே., வாகனகத்தில் தப்பி செல்ல முயற்சித்த மாரிமுத்து., அருண் மற்றும் மாரிச்செல்வம் ஆகியோர் கை மற்றும் கால்களில் பலத்த காயமடைந்து வலியால் அலறித்துடித்துள்ளனர். இவர்களின் அலறலை கண்டு பெரும் மன வருத்தத்திற்கு உள்ளான காவல் துறையினர்., மூவரையும் பத்திரமாக மீட்டு., அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.  

மருத்துவமனை, hospital,

மருத்துவமனையில் சிகிச்சை அளித்த மருத்துவர்கள்., வாகனத்தில் இருந்து மூவரும் தவறி விழுந்ததால்., மூவருக்கும் பலமான அடியானது கை மற்றும் கால்களில் ஏற்பட்டுள்ளது என்றும்., இவர்களுக்கு கட்டாயம் மாவுக்கட்டு போட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். இதனை ஏற்ற காவல் துறையினர் குற்றவாளிகளுக்கு மாவுக்கட்டு போட்ட பின்னர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். 

மேலும்., குற்றங்களில் ஈடுபடும் நபர்களை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும்., சட்டத்தின் ஓட்டையில் இருந்து இனி யாரும் தப்பிக்க முடியாத அளவிற்கு ஆதாரங்களை திரட்டி., தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும்., இந்த நடவடிக்கைக்கு மக்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். கொலை குற்றவாளிகள் என்று தெரிந்தும்., அவர்களின் கை மற்றும் கால்களில் அடிபட்டு இருப்பதை எண்ணி வருத்தமடைந்து., மருத்துவமனைக்கு அழைத்து சென்று உரிய சிகிச்சை அளிக்க வைத்த காவல் துறையினருக்கு பாராட்டுக்கள் மற்றும் நன்றிகள்... 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in thoothukudi culprit escape plan failure and now got treatment in hospital


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->