மக்களால் அமைக்கப்பட்ட கால்வாய்... கூட்டு முயற்சியின் பெரும் வெற்றி..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் தற்போது மழைக்காலமாக இருந்து வரும் நிலையில்., இக்காலங்களில் கிடைக்கும் மழை நீரினை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். மேலும்., தற்போது வரை தூர்வாரப்பட்டுள்ள ஏரி மற்றும் குளங்களில் நீரானது தேக்கிவைக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கத்தை அடுத்துள்ள சாத்தனுர் அணையானது கடந்த 1952 ஆம் வருடத்தில் நடைபெற்ற காமராஜர் ஆட்சியின் போது கட்டப்பட்டது. இந்த அணையின் மூலமாக திருவண்ணாமலை., கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்ட மக்களின் விவசாய பாசனம் மற்றும் குடிநீர் தேவை தீர்ந்து வந்தது. 

sathanur dam,

என்னதான் அணை கட்டப்பட்டு பிற மாவட்டத்தினை செழிப்புடன் பார்த்துக்கொண்டாலும்., அணை அமைத்துள்ள சாத்தனூர் கிராம மக்களின் விவசாயத்திற்கான நீர் தேவை மற்றும் குடிநீர் தேவைக்கு ஒரு சொட்டு கூட அணைகளில் இருந்து கிடைப்பதில்லை என்று வருத்தம் தெரிவிக்கின்றனர். மேலும்., புதிய கால்வாய் அமைப்பதற்காக மாவட்ட ஆட்சியராக கந்தசாமியிடம் அனுமதி வாங்கி அமைத்துள்ளனர். 

ஊர் மக்களிடம் நிதி திரட்டி கசிவு நீர் குட்டை சுமார் 15 கிமீ தொலைவிற்கு புதிய கால்வாயை அமைத்து ஏரிக்கு நீர் கொண்டு செல்லும் திட்டத்தினை செய்யப்படுத்தி., கசிவு நீர் குட்டையில் மூலமாக வரும் நீரினை ஆயிரக்கணக்கான ஏக்கர் பாசன நிலங்கள் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு பல்வேறு தரப்பினர் தங்களின் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in thiruvannamalai sathanur village peoples construct lake water path form dam


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->