மண்டையில் குறுக்கு நெடுக்கு வெட்டுக்கு நோ..! சலூன் கடைக்கு பறந்த கடிதம்.!! - Seithipunal
Seithipunal


இளைஞர்கள் நம் நாட்டின் தூண்கள்... மாணவர்கள் நம் நாட்டின் முதுகெலும்புகள்.. என்பது இன்று கூறும் வார்த்தை அல்ல.... நாம் சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் நாள் முதலாகவே இதனை பலரும் கூறி வந்ததை நாம் அறிவோம். அன்றைய காலத்தில் இளைஞர்களில் இருந்து மாணவர்கள் வரை அனைவரும் நல்லதொரு ஒழுக்கத்தில் சுய கட்டுப்பாடுடன் இருந்து வந்துள்ளனர். அவர்களின் பெருமையை அந்த பள்ளி எடுத்துரைக்கும் வகையில்., அந்த பள்ளிகளில் இவர்கள் செய்த சாதனைகளும் இடம்பெற்றிருக்கும். 

அன்றைய காலத்தில் குறைவான மதிப்பெண்கள் எடுத்தாலும் (அன்றைய சூழ்நிலையில் அது பெரிய மதிப்பெண்) தனிமனித ஒழுக்கம் மற்றும் சுய கட்டுப்பாட்டுடன் வாழ்ந்து வந்துள்ளனர். இன்றைய தலைமுறை அப்படியே மாற்றாக பெரும் கேள்விக்குறியே இருக்கிறது. 

அன்றுள்ள காலத்தில் ஆசிரியரிடம் தவறு இளைக்கும் பட்சத்தில் என்ன நடந்திருக்கும் என்று இப்போது நினைத்து பார்த்தாலும் முகத்தில் பயத்துடன் கூடிய புன்னகை இருக்கும்.. ஏனெனில் ஆசிரியர்களிடம் தவறு இழைத்து மாட்டிக்கொண்டால் பிரம்படியை வாங்கவும்., பிளாஸ்டிக் குழாய் அடியை வாங்கி உணர்ச்சியற்று நமது கை கால்கள் இருக்கும். 

650

இப்போதுள்ள தலைமுறை ஆசிரியர் ஒரு வார்த்தை கூறிவிட்டால் தற்கொலை.. ஆசிரியரை துன்புறுத்துதல் போன்ற துயரங்களை இளைத்து வருகிறது. இதன் பலனாக எதிர்காலத்தில் நிர்கதியாய் நிற்கும் சூழ்நிலையை தனக்கு தானே உருவாக்கி கொள்கிறான். இன்றைய பள்ளிகளுக்கு செல்லும் இளம் மாணவர்கள் மற்றும் சிறு வயதுடைய மாணவர்கள் தங்களின் விருப்பத்திற்கு ஏற்றார்போல் ஆடைகள் அணிகலன்கள்., காதில் கடுக்கன்.. கையில் பட்டாக்கத்தி என பல பொருட்களை தங்களுடன் எடுத்துச் செல்கின்றனர். 

இதுமட்டுமல்லாது மாணவர்களுக்கு இடையே நடக்கும் கோஷ்டி மோதல் தற்போது அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த சண்டையின் தற்போது உள்ள ஒருவகையாக மாணவர்களிடையே பரவும் கலாச்சாரமாக முடிவெட்டும் ஸ்டைலாக முடி வெட்டும் கலாச்சாரம் பரவி வருகிறது. பள்ளியில் பயின்று வரும் மாணவருக்கு ஏற்றார் போல அல்லாது., எந்த செயலையும் செய்யத் துணியும் கொள்ளைக்கூட்டம் மற்றும் கொலை செய்யக்கூட தயங்காத கூட்டத்தினை போன்று உருவம் பெற்று முடியினை வெட்டி கொள்கின்றனர். 

விதவிதமான வகையில் முடியை வெட்டி செல்வதும்., கலர் கோழிக்குஞ்சு போல கலர் அடித்து கொள்வதும் இன்று பேஷன் என்ற பெயரில் பரிணாமம் அடைந்து., ஒழுக்கத்தை கற்பிக்க வேண்டிய ஆசிரியர்களின் கைகளும்., கண்டித்து கூற வேண்டிய வாய்களும் சட்டத்தால் கட்டப்பட்டு பல வன்முறைகள்., துயர் சம்பவங்கள் அரங்கேறுகிறது. இதனை "ஸ்.டைல்" என்று பெருமை வேறாக ஒரு கூட்டம்... 

ஒரு காலத்தில் வெள்ளை சட்டை மற்றும் காக்கி டவுசரும்., அழகான முடிவெட்டும் இருந்தது. இன்றைய காலத்தில் மாணவர்கள் என்ற அடையாளம் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து., மாணவர்கள் என்றாலே கையில் கத்தியுடன் அலைவார்கள்., சொல்வதை கேட்க மாட்டார்கள் என்று என்னும் வகையில் மாறிக்கொண்டு வந்துள்ளது. தற்போதுள்ள காலகட்ட சூழ்நிலையும் இதற்கு முக்கிய காரணமாக உள்ளது. 

மாணவர்களிடையே வெகுவாக பரவிக்கொண்டு வரும் இந்த கலாச்சாரத்தை குறைக்க திருநெல்வேலி மாவட்டம் தென்காசி - குற்றாலம் சாலையில் அமைந்துள்ள மேலகரம் அரசு மேல்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் ஒரு விண்ணப்ப கடிதம் ஒன்றை அழகு நிலைய உரிமையாளர்களுக்கும்., பணியாளர்களுக்கும் எழுதியுள்ளார். 

இந்த படிவத்தில்., மாணவர்களுக்கு ஒழுக்கத்தை மேம்படுத்துவது ஆசிரியர்களை மட்டும் சார்ந்த விஷயமல்ல.. இதில் நம் சமூகத்திற்கும் தொடர்பு உள்ளது. அதில் அலங்கார நிபுணர்கள் ஆகிய நீங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றீர்கள். உங்களின் செயல்பாடு மாணவர்களின் அகத்தையும்., புறத்தையும் அழகுற செய்கிறது. உங்களுக்கு ஆசிரியர் சமூகத்தின் சார்பாக வாழ்த்துக்கள். 

school student haircut melagaram, school student haircut, melagaram school,

ஒரு சிறிய கோரிக்கையாக., பள்ளி மாணவர்களின் விருப்பத்திற்கு ஏற்றார்போல் கோடு போடுதல்., பாக்ஸ் கட்டிங்., V கட்டிங்., Spike போன்றவற்றை தவிர்த்து பள்ளி சூழலுக்கு ஏற்றாற்போல் அவர்களுக்கு அலங்காரம் செய்து கொடுக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இது மாணவர்களின் ஒழுக்கத்தை மேம்படுத்த உதவும். வாருங்கள் ஒற்றுமையோடு ஒன்றுபட புதிய தேசத்தை உருவாக்குவோம்... என்று அந்த கடிதத்தில் கூறியுள்ளார். 

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மேலகரம் அரசு மேல்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் மற்றும் அங்கு பணியாற்றி வரும் ஆசிரியர்கள்., ஆசிரியைகள் இந்த கடிதத்தை அழகு நிலைய உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அனுப்பி தங்களின் கோரிக்கையை முன் வைத்துள்ளனர். ஆசிரியர்களின் முயற்சி வெற்றி பெறுவதற்கு எங்களின் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in thirunelveli district melagaram school HM request for barbers


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->