சீரழிந்த சேலம்.! பெண்களை வைத்து விடுதிகளில் அரங்கேறும் கொடூரம்.!! வெளியான அதிர்ச்சி தகவல்.!! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்தில் உள்ள காவல் துறை அதிகாரிகளுக்கு சேலம் நகரின் பிரதான தேசிய நெடுஞ்சாலை பகுதியில் இருக்கும் தாங்கும் விடுதிகளில் கடந்த சில நாட்களாக வெளிமாநில அழகிகள் அதிகளவில் வருவதாகவும்., சம்பவ இடத்தில் உள்ள விடுதிகளில் விபச்சாரம் நடைபெறுவதாகவும் காவல் துறையினருக்கு புகார்கள் வந்துள்ளது. 

இதனையடுத்து காவல் துறையினருக்கு தொடர்ச்சியாக புகார்கள் வந்ததை அடுத்து., சம்பவ இடத்திற்கு சென்று காவல் துறையினர் சோதனை செய்ய திட்டமிட்டுள்ளனர். இவர்களின் திட்டப்படி அன்னதானப்பட்டி காவல் ஆய்வளரின் சார்பில் இருக்கும் காவல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். 

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் அங்குள்ள தனியார் தங்கும் விடுதிகளில் மேற்கொண்ட சோதனையின் போது., வெளிமாநில இளம்பெண்கள் மற்றும் கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாசலத்தை சார்ந்த மகா., கலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஆகியோர் இருந்துள்ளனர். இவர்களை அதிரடியாக கைது செய்த காவல் துறையினர் இவர்களை வைத்து விபச்சாரம் நடத்தி வந்த திருப்பூரை சார்ந்த அபுல்ஹாசன் என்ற நபரையும் அதிரடியாக கைது செய்தனர். 

மேலும்., கடந்த சில வருடங்களாக சேலத்தை பொறுத்த வரையில் விபச்சார தொழில்கள் இல்லாமல் இருந்து வந்த நிலையில்., தற்போது மீண்டும் தனியார் விடுதிகளில் விபச்சாரம் நடைபெறும் சம்பவமானது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.  இது தொடர்பான விசாரணையை கவலை துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். 

English Summary

in selam prostitution in private hotels police search going on


கருத்துக் கணிப்பு

கர்நாடக காவேரியில் தண்ணீர் திறப்பதன் காரணம்?
கருத்துக் கணிப்பு

கர்நாடக காவேரியில் தண்ணீர் திறப்பதன் காரணம்?
Seithipunal