சேலத்தில் பெண்ணை கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய கொடூர கும்பல்.! சிக்கிய கும்பலின் அதிர்ச்சி பின்னணி தகவல்.!! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்தில் உள்ள கோட்டகவுண்டம்பட்டியில் பெற்றோருடன் வசித்து வரும் மாணவி., கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் இரவு நேரத்தில் சேலத்தில் உள்ள தோழியின் இல்லத்திற்கு செல்ல திட்டமிட்டு சென்றுள்ளார். பின்னர் அங்குள்ள கடையில் புத்தகங்களை வாங்கிவிட்டு தனது சகோதரியின் கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். 

இவர்களின் வாகனமானது அங்குள்ள மாமாங்கம் தகவல் தொழில்நுட்ப மையத்திற்கு அருகில் சென்ற சமயத்தில் சகோதரியின் கணவருக்கு இயற்கை உபாதை (சிறுநீர்) கழிப்பதற்காக வாகனத்தை நிறுத்திவிட்டு சிறுநீர் கழித்துக்கொண்டு இருந்துள்ளார். இதற்கு பின்னர் வாகனத்தில் கிளம்பிய இருவரும் சம்பவ இடத்தில் இருந்து சிறிது தூரம் சென்ற நிலையில்., ஐந்து பேர் சேர்ந்த கும்பலானது இவர்களின் வாகனத்தை இடைமறித்துள்ளது. 

மோட்டார் வாகனத்தை நிறுத்திய கும்பல் உடனடியாக அந்த பெண்ணை தூக்கி அங்கிருக்கும் முட்புதருக்குள் சென்றுள்ளது. இதனையடுத்து மோட்டார் வாகனத்தில் சகோதரியின் கணவரை மிரட்டி வைத்திருந்த கும்பலில் ஒரு காம கொடூரன் பெண்ணை பலாத்காரம் செய்துள்ளான். 

இந்த நிலையில்., காப்பாற்றுங்கள்.... காப்பாற்றுங்கள் என்று சப்தம் எழுப்பவே., அங்கிருக்கும் கிராம மக்கள் அனைவரும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைய துவங்கினர். இவரின் கூச்சலை கேட்டு அதிர்ச்சியான காம கும்பலானது உடனடியாக அங்கிருந்துதப்பி சென்றது. 

இதனையடுத்து மாணவி இது குறித்து அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில்., இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர் உடனடியாக விசாரணையை மேற்கொள்ள துவங்கியுள்ளனர். சம்பவ இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமிராக்களை கைப்பற்றிய காவல் துறையினர் அதில் பதிவான காட்சிகள் குறித்து ஆராய்ச்சி செய்ய துவங்கினர். 

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஜெயப்ரகாஷ்., பாபு., மணிகண்டன் ஆகிய மூவரை கைது செய்த காவல் துறையினர்., இந்த சம்பவத்தில் ஈடுபட்ட தலைமறைவாக இருக்கும் இன்னும் இரண்டு நபர்களை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in selam girl rapped police arrest culprit


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->