ஒத்தயில் வந்து கெத்துக்காட்டிய விநாயகர்.. வண்டியை போட்டு தெறித்தோடிய இளைஞர்கள்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி - மேட்டுப்பாளையம் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையில் அமைதியாக நடைபோட்டு காட்டுயானை நடந்து சென்று கொண்டு இருந்தது. 

நேற்று மாலை நேரத்தில் அங்குள்ள குஞ்சப்பனை சோதனை சாவடிக்கு அருகே காட்டுயானையொன்று சாலையினை கடந்து வனப்பகுதிக்குள் செல்ல வழியில்லாததால்., ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு சாலையில் நடந்து சென்றது. 

இந்த நேரத்தில்., மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரிக்கு வந்த இலகர்களின் மீது கம்பீரமாக யானை நடைபோட்டு வந்த நிலையில்., இதனை கண்ட இளைஞர்கள் வாகனத்தை நிறுத்த முயற்சித்து நிலைதடுமாறி சாலையில் விழுந்தனர். 

mettupalayam, mettupalayam to kothagiri.

இவர்களை கண்ட யானை இவர்களை தாக்கும் என்ற எண்ணம் ஏற்பட்ட நிலையில்., இவர்களுக்கு பின்னால் வந்த லாரி ஓட்டுநர் இவர்களை காக்கும் பொருட்டு லாரியை இவர்களுக்கு முன்னாள் கொண்டு வந்து நிறுத்தினார்.

இதனையடுத்து இரு சக்கரவாகனத்தில் இருந்த இளைஞர்களை யானையின் கண்களில் இருந்து மறைத்த நிலையில்., யானை யாருக்கும் இடையூறு இல்லாது சம்பவ இடத்தில் இருந்து சென்றது. இதனால் போக்குவரத்தானது பாதிக்கப்பட்டாலும்., யாருக்கும் இடையூறு இல்லாமல் காட்டிற்குள் சென்றது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in mettupalayam to kothagiri elephant cross road one hour


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->