மதுரை மீனாட்சி கோவிலில் கேட்பாரற்று கிடைக்கும் தமிழனின் விஞ்ஞானம்..! கோரிக்கை வைக்கும் பொதுமக்கள்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் மதுரை மாவட்டத்தில் உள்ள மதுரை மாநகரில் மீனாட்சியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் வைகை ஆற்றின் கரையோரம் அமைத்துள்ள நிலையில்., மதுரை மாநகருக்கு மத்தியில் அமைந்துள்ள சிவாலயமும் இதுவே ஆகும். இந்த கோவில் குறித்த பல புராதன வரலாற்று காவியங்களை நாம் அறிந்திருப்போம். 

தமிழர்கள் அன்றே பல விஷயங்களில் சிறந்தவர்கள் என்பது அனைவரும் அந்த ஒன்றே. உலகினை நேசித்து வாழ்ந்த தமிழன் தனது கலாச்சாரத்தையும்., பண்பாட்டையும்., அறிவியல் தத்துவங்களையும் மறைமுகமாக தனது சந்ததிகளுக்கு கூறிவிட்டு சென்றான். இன்றளவில் அறிவியலால் கூட கூறஇயலாத பல விஷயங்களுக்கு பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பே பதிலும் அளித்து சென்றான். 

மதுரை மீனாட்சி கோவில்,

பொதுவாக தமிழகம் மட்டுமல்லாது உலகத்தின் பல பகுதியை ஆண்ட தமிழ் மன்னர்கள், முன்னோர்களின் வழிகாட்டலின் படி கட்டப்பட்ட கோவில்களில் பல வியக்கும் விஷயங்களை மறைமுகமாக வைத்து சென்றனர். அந்த வகையில் பல கோவில்களில் சிற்பக்கலைகளில் இருந்து கட்டிட கலைகள் என கூறிக்கொண்டே செல்லும் அளவிற்கு தன்னகத்தே வித்தைகளையும்., விஷயங்களையும் வைத்திருந்தான். 

வாழ்வியலுக்கு தேவையான சகலத்தையும் அறிந்த தமிழன் கோவில்கள் மூலமாக பல விஷயங்களை கூறியுள்ள நிலையில்., தமிழகத்தின் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் உள்ள ஓவியம் குறித்தும் நாம் அறிய வேண்டிய கட்டாயம் உள்ளது. இக்கோவில் உள்ள பகுதியில் அன்றே ஓசோன் படலத்தை நன்கு அறிந்து எதிர்கால சந்ததியின் நன்மைக்காக வரைந்து வைத்துள்ளது தான் விஞ்ஞானத்தின் உச்சக்கட்டம். 

இன்றுள்ள அறிவியல் ஆய்வாளர்கள் பலவிதமான ஆராய்ச்சிக்கு பின்னர் ஓசோன் படலம் மற்றும் தற்போதைய பாதிப்புகளை கூறியுள்ள நிலையில்., ஓசோன் படலத்தின் துல்லிய வரைபடம் மற்றும் விளக்கம்., சுழலும் லிங்கம் போன்றவை மீனாட்சி கோவிலில் உள்ளது. இந்த வரைபடங்கள் குறித்த தகவல் இக்கோவிலுக்கு சென்றவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

மேலும்., இது தொடர்பான ட்விட்டர் பதிவில் " சமீபத்திய மதுரை பயணத்தில் மீனாட்சியம்மன் கோவிலில் நான் கண்டு வியப்பில் ஆழ்ந்த இரண்டு விடயம். 700 ஆண்டுகளுக்கு முன்பே ஓசோன் படலத்தை பற்றிய விழிப்புணர்வு வரைபடம். இன்னொன்று சுழலும் லிங்கம் வரைபடம். அதேநேரம் ஓசோன் வரைபடம் கேட்பாரற்று கிடந்தது போன்று ஒரு மூலையில் இருந்தது வருத்தம் " என்று குறிப்பிட்டுள்ளார். தமிழரின் பாரம்பரிய தகவல்கள் அனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டும்., இனி வரும் சந்ததிகளுக்கு இது குறித்து தெரிவிக்கப்பட வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in madurai meenatchi temple ozone layer


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->