பசி மயக்கத்தில் சுருண்டு விழுந்த பெண்மணி.. தன்னிடம் இருந்த உணவை வழங்கிய மதுரை காவல்துறை.!! - Seithipunal
Seithipunal


உலகளவில் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸானது இந்தியாவிலும் அதிதீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸின் தாக்கத்திற்கு இந்தியாவில் 933 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 19 பேர் பலியாகியுள்ளனர். மேலும், நேற்று ஒரேநாளில் 139 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் நேற்று வரை கரோனா அறிகுறியுடன் இருந்த நபர்களின் எண்ணிக்கை 41 ஆக இருந்தது. இவர்களில் 2 பேர் சிகிச்சை முடிந்து இல்லங்களுக்கு திரும்பிய நிலையில், ஒருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இன்று மேலும் இரண்டு பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.

கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் இருக்க அரசு பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இதனால் மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்க அறிவுத்தப்பட்டுள்ளனர். அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் வெளியே வர அனுமதி செய்யப்பட்டுள்ளனர். 

இந்த நிலையில், மதுரையில் பெண்ணொருவர் சாலையில் மயக்கமடைந்து கிடந்துள்ளார். இவரை கண்ட காவல் துறை அதிகாரிகள், பெண்ணை மீட்டு ஆசுவாசப்படுத்தி அமரவைத்துள்ளனர். பின்னர் அவர் பசி மயக்கத்தில் மயங்கி விழுந்ததை அறிந்த காவல் துறையினர், தன்னிடம் இருந்த உணவை பெண்ணிடம் வழங்கி சாப்பிட வைத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Click Here to Watch Video

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Madurai girl unconscious police give food 144 curfew


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->