சதுரங்க வேட்டை பாணியில் பலே திட்டத்துடன் களமிறங்கிய கும்பல்.. சத்தமே இல்லாமல் தூக்கிய காவல்துறை.. மக்களே உஷார்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் அருகேயுள்ள அத்திப்பள்ளி பகுதியை சார்ந்தவர் சதீஷ் குமார். இவரது அலைபேசிக்கு தொடர்பு கொண்ட நபர் அணுஆயுதம் மற்றும் புற்றுநோய் தொடர்பான பிரச்சனைகளில் மருத்துவ குணத்திற்கு பயன்படும் சிவப்பு பாதரசம் இருப்பதாக தெரிவித்துள்ளார். 

மேலும்., இவ்வாறாக பல பயன்களை தன்னகத்தே கொண்டுள்ள சிவப்பு பாதரசம் மில்லி கிராம் ரூ.3 கோடிக்கு விற்பனை செய்யப்படுவதாகவும்., இதனை விற்பனை செய்து தரும் பட்சத்தில் இலட்சக்கணக்கில் கமிஷன் அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

இதற்கு பின்னர் சேலத்தில் சாதிஇசகுமாரினை 5 நபர்கள் வந்து சந்தித்து சென்ற நிலையில்., அவர்களின் அலைபேசியில் சிவப்பு பத்தரசத்தினை படமெடுத்து வைத்த காண்பித்து., மற்றொரு புகைப்படமாக பணக்கட்டுகளையும் காண்பித்துள்ளார். 

இதனை சற்றும் நம்பாத சதீஷ்குமார் சாதுர்யமாக மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். இதனைத்தொடர்ந்து இதன் அடிப்படையில் சதீஷ்குமாருடன் மாறுவேடத்தில் காவல் துறையினர் இன்று காலை சென்றுள்ளனர். 

சதீஷுடன் வந்திருக்கும் நபர் காவல் அதிகாரி என்பது கூட தெரியாமல் ஐவரும் சேர்ந்து சிவப்பு பத்தரசத்தினை காண்பித்து பேரம் பேசியதை அடுத்து., சம்பவ இடத்தில் இருந்த பாண்டியராஜன்., புருசோத்தமன் மற்றும் கண்ணதாசன் உள்ளிட்ட இவரை காவல் துறையினர் கைது செய்தனர். 

பின்னர் இவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில்., மதுரை மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட பல மாவட்டத்தை சார்ந்த நபர்களிடம் கண்ணதாசன் பிரபல சித்த மருத்துவர் என்று கூறி பலரை ஏமாற்றியது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in krishnagiri fraud gang arrest by police


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->