லாரி ஓட்டுநர்களிடம் கொலை முயற்சி வழிப்பறி.. சொகுசு வாழ்க்கைக்கு வழியாக கல்லூரி மாணவர் விபரீத முடிவு.. திண்டுக்கல்லில் பயங்கரம்...!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் இருக்கும் செங்குளம் பகுதியில் இரவு நேரத்தில் சாலையோரம் லாரி நிறுத்திவைக்கப்ட்டு இருந்தது. இந்த லாரியில் ஓட்டுனர்கள் அருள் (வயது 27)., ரமேஷ் (வயது 28) மற்றும் தமிழ்செல்வன் (வயது 50) ஆகியோர் உறங்கிக்கொண்டு இருந்துள்ளனர். 

இவர்கள் மூவரையும் அதிகாலை நேரத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் மிரட்டி தாக்கியுள்ளது. மேலும்., கத்தி உள்ளிட்ட அரிவாள் போன்ற ஆயுதத்துடன் வெட்டி விட்டு ரூ.11 ஆயிரம் பணம் மற்றும் அலைபேசியை பறித்துவிட்டு தப்பி ஓடியுள்ளார். இதனையடுத்து ஓட்டுனர்கள் இது தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். மேலும்., மூன்று ஓட்டுநர்களும் படுகாயமடைந்து மதுரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டனர். இதனையடுத்து அங்குள்ள கண்காணிப்பு காமிராக்கள் மூலமாக குற்றம் செய்த நபர்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

robbery, robbery at night,

இந்த விசாரணையில்., இரண்டு மோட்டார் சைக்கிளில் 6 பேர் கொண்ட கும்பல் லாரி ஓட்டுனர்களை தாக்கி கொள்ளையடித்து சென்றது தெரியவந்ததை அடுத்து., மோட்டார் சைக்கிளின் பதிவு எண் மூலமாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில்., இக்குற்றத்தில் ஈடுபட்டவர்கள் கல்லூரி மாணவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

அங்குள்ள கோவிந்தபுரம் பகுதியை சார்ந்த ரவிக்குமாரின் மகன் முத்துப்பாண்டி (வயது 17)., ஆர்.எம்.காலனி பகுதியை சார்ந்த கர்ணனின் மகன் விக்னேஸ்வரன் (வயது 19)., கோவிந்தபுரம் பகுதியை சார்ந்த குமரேசன் மகன் ஜெயப்ரகாஷ் (வயது 17)., பிள்ளையார் பாளையம் பகுதியை சார்ந்த கண்ணனின் மகன் பிரகாஷ் (வயது 19) மற்றும் ரவியின் மகன் கார்த்திகேயன் (வயது 17) என்பது தெரியவந்துள்ளது. 

இந்த கூட்டத்தில் பிரகாஷ் நத்தம் பகுதியில் உள்ள தொழிற்பட்டய கல்விக்கான (Dipoma) கல்லூரியில் பயின்று வரும் நிலையில்., நண்பர்களாக பழகி வந்த அனைவரும் சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு இரவு நேரத்தில் திருட்டு மற்றும் வழிப்பறி போன்ற சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இது தொடர்பாக பிற குற்றத்திலும் இவர்கள் ஈடுபட்டனரா? என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in dindigul gang robbery form lorry drive police investigation and arrest


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->