மாணவிகளுக்கு ஆபாச செயலியை பதிவிறக்கம் செய்ய சொல்லி அறிவுறுத்திய தாளாளர்..! கோவை புனித மரிய பள்ளியில் பெரும் அதிர்ச்சி.!! - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காந்திபுரம் பகுதியில் புனித மரியன் உயர்நிலை பள்ளியானது செயல்பட்டு வருகின்றது. இந்த பள்ளியின் தாளாளராக பாதிரியார் மரிய ஆண்டனிதாஸ் (வயது 55) பணியாற்றி வருகிறார். அப்பகுதியில் இருக்கும் ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு பயின்று வரும் மாணவர்களுக்கு பாடம் எடுத்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார். 

இந்த நிலையில்., நேற்று முன்தினத்தன்று மாணவிகளிடம் தனது அலைபேசியை வழங்கி அதில் இருக்கும் செயலியை பார்க்க சொல்லி கூறியுள்ளார். மேலும்., அதனை தங்களின் வீட்டில் உள்ள அலைபேசியில் பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளுமாறும் கூறியுள்ளார். இதனையடுத்து சிறுமிகள் வீட்டிற்கு சென்றதும் தனது பெற்றோர்களிடம் இது குறித்து கூறியுள்ளனர்.  

மேலும்., மாணவிகள் ஆசிரியரின் அலைபேசியை வாங்கி பார்த்த சமயத்தில் அதில் ஆபாச படங்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சிக்குள்ளாகி., ஆசிரியரிடம் மீண்டும் அலைபேசியை வழங்கியுள்ளனர். வீட்டிற்கு சென்ற மாணவிகள் இது குறித்து பெற்றோரிடம் தெரிவித்த நிலையில்., அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் பள்ளிக்கு முன்னதாக திரண்டுள்ளனர். 

sexual harassment, sexual abuse, sexual torture, video capturing,

பள்ளியில் பயின்று வரும் மாணவிகளுக்கு அலைபேசியில் ஆபாச படம் காண்பித்த தாளாளரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி வற்புறுத்தி போராட்டம் நடத்தியதை அடுத்து., தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் பேச்சு வார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறி ஒப்புக்கொண்டதை அடுத்து பள்ளியில் இருந்து கலைந்து சென்றுள்ளனர். 

இதுமட்டுமல்லாது இது குறித்து கோயம்புத்தூர் மகளீர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து., இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் மரிய ஆண்டனி தாஸை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in coimbatore school chief sexual explanation for girl students


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->