கூட்ட நெரிசலில் ஓசி பயணம்.. ஓசி ஆசாமிகளுக்கு ஆப்படித்த இரயில்வே நிர்வாகம்.!! - Seithipunal
Seithipunal


சென்னையில் மின்சார ரயில் மிகவும் பிரபலமான ஒன்றாகும். வேலைக்குச் செல்பவர்கள், வெளியூரிலிருந்து சுற்றுலா வருபவர்கள் என எந்த நேரமும் மின்சார ரயிலில் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். 

அதேபோன்று வார விடுமுறை நாட்கள் மற்றும் பொது விடுமுறை நாட்களில் மக்களின் கூட்டம் மின்சார ரயில்களில் அதிகளவு இருக்கும். தங்களுக்கு பிடித்த இடங்களுக்கு சென்று வர எதுவாக அமைக்கப்பட்ட இருப்பு பாதைகளின் காரணமாக அனைவரும் மின்சார ரயில்களை உபயோகம் செய்து வருகின்றனர். 

அந்த வகையில், தீபாவளி மற்றும் பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி ஓசிப் பயணம் செய்வோரின் செயலும் அதிகரித்து வருகிறது. கடந்த வருடத்தின் பொங்கல் பண்டிகையன்று மின்சார ரயில்கள் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில் பயணச்சீட்டு எடுக்காமல் பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 

சென்னை கோட்டத்திற்கு உட்பட்ட மின்சார இரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகர்கள் மேற்கொண்ட சோதனையில், கடந்த 14ஆம் தேதி 2,300 பேர் டிக்கெட் எடுக்காமல் ரயிலில் பயணம் செய்ததும், இவர்களிடமிருந்து ரூ.8 லட்சத்திற்கு மேல் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. 

இதனை போன்று கடந்த 13ம் தேதி அன்று இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் ஓசிப்பயணம் செய்துள்ளதும், இவர்களிடம் அபராதம் வசூலித்ததும் நடைபெற்று வந்துள்ளது. மேலும், முன்பதிவு செய்யப்படாத பயணச்சீட்டுகளை பெற்று கொண்டு, ரிசர்வேஷன் பெட்டியில் பயணம் செய்வதன் மூலமாகவும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக இரயில்வே அதிகாரிகள் தெரிவித்த சமயத்தில், மின்சார இரயில்களை பொருத்தவரையில் திடீரென சோதனை நடத்தப்படும். பண்டிகை காலங்களில் சிலர் வரிசையில் நின்று டிக்கெட் எடுக்க சோம்பேரிபட்டு, இலவசமாக பயணம் செய்து வருவதும், இவர்களை பிடிக்கும்போது இவர்களிடமிருந்து அபராதம் வசூல் செய்யப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Chennai during pongal holiday without ticket travelling persons


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->