ஒரே ஆட்டம்... இந்த உலகக்கோப்பையை திருப்பி போடும் வெற்றி! விருது, பூகம்பம், நெகிழ்ச்சி! - Seithipunal
Seithipunal


உலக கோப்பை லீக் ஆட்டத்தில் நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து அணிக்கு ஆப்கானிஸ்தான் அணி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது.

பொதுவான் கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஆப்கானிஸ்தான் குறைந்த பலம் கொண்ட அணி என்ற பார்வை உண்டு. ஆனால், ஒருசில கிரிக்கெட் ரசிகர்கள் குறிப்பாக இந்திய ரசிகர்கள் ஆப்கானிஸ்தானை அண்மைய காலமாக அப்படி பார்ப்பதில்லை.

முந்தைய இந்தியாவுடனான லீக் ஆட்டத்திலும் ஆப்கானிஸ்தான் சிறப்பாக விளையாடியது என்று சொன்னால் மிகையாகாது. 

சீனாவில் நடந்த ஆசிய விளையாட்டு கிரிக்கெட் போட்டிகளிலும் மற்ற அணிகளைவிட ஆப்கானிஸ்தான் அணி அனுபவம் வாய்ந்த வீரர்களை கொண்டு களமிறங்கி வெள்ளிப்பதக்கம் வென்றது. 

டெல்லி அருண் ஜெட்டிலி மைதானத்தில் இங்கிலாந்து எதிரான லீக் ஆட்டத்திலும் ஆப்கானிஸ்தான் அணி சுழற் பந்து வீச்சு மூலம் அபாரமான ஒரு வெற்றியை பதிவு செய்துள்ளது.

இங்கிலாந்து அணியிடம் நிச்சயம் ஆப்கான் தோற்றுவிடும் என்று நினைத்தவர்களுக்கு தங்களின் ஆட்டம் மூலம் பதிலடி கொடுத்துள்ளனர் ஆப்கான் வீரர்கள்.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்ய, முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் ஆரம்பமே அதிரடியாக ஆடியது. விக்கெட் இழப்பு இல்லாமல் 16 ஓவர்களில் 110 ரன்களை சேர்த்து இருந்தது.

டிவிட்டர் உள்ளிட்ட சமூகவலைத்தளம் முழுவதும் இங்கிலாந்து எதிரான ஆட்டத்தில் ஆப்கான் விக்கெட் இழக்காமல் 110 ரன்களை கடந்தது குறித்து பலரும் பேச தொடங்கினர்.

அதுவரை ஆட்டத்தை பார்க்காதவர்கள் கூட, என்னதான் செய்கிறது ஆப்கான் என்று பார்ப்போமே என்று பார்க்க தொடங்கினர்.

உண்மையில் இங்கிலாந்து-ஆப்கானிஸ்தான் ஆட்டத்தை பார்த்தவர்களுக்கு முழு திருப்தி கிடைத்திருக்கும் என்று தான் சொல்ல வேண்டும்.

தொடக்க ஆட்டக்காரர்கள் ரஹ்மனுல்லா குர்பாஸ் 80 ரன்களும்,  இப்ராஹிம் ஸத்ரான் 28 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

அடுத்து களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தாலும், இக்ரம் அலிகில் 58 ரன்களும், ரஷித் கான் 23 ரன்களும், முஜீப் உர் ரஹ்மான் 28 ரன்களும் எடுத்து அசத்தினார்.

இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 49.5 ஓவர்களில், அணைத்து விக்கெட்களையும் இழந்து 284 ரன்கள் சேர்த்து. இதனையடுத்து 285 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களை அலற வைத்தனர் ஆப்கான் பந்து வீச்சாளர்கள்.

ஆப்கான் பந்துவீச்சை சமாளித்து நிதானமாக ஆடிய ஹாரி புரூக் 66 ரன்களும், டேவிட் மலான் 32 ரன்களும் சேர்த்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.

இறுதியில் 40.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் கைப்பற்றிய ஆப்கானிஸ்தான் அணி, நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை 69 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

ஆப்கன் பந்துவீச்சை பொறுத்தவரை முஜீப் மற்றும் ரஷித் கான் தலா 3 விக்கெட்களையும், மொஹம்மது நபி 2 விக்கெட்டையும், நவீன் மற்றும் ஃபஸல்ஹக் ஃபரூக்கி தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றி அசத்தினர்.

16 பந்துகளில் 28 ரன்கள், 10 ஓவர்கள் 3 விக்கெட்களை வீழ்த்திய ஆப்கன் வீரர் முஜீப் உர் ரஹ்மான் ஆட்ட நாயகன் விருதை வென்றார். மேலும் தனது இந்த விருதை பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் நாட்டு மக்களுக்கு சமர்ப்பித்துள்ளார் முஜீப் உர் ரஹ்மான்.

உலகக் கோப்பை வரலாற்றில் ஆப்கானிஸ்தான் அணி பதிவு செய்துள்ள இரண்டாவது வெற்றி இதுவாகும். முன்னதாக கடந்த 2015- உலகக்கோப்பை தொடரில் ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தி இருந்தது.

இங்கிலாந்து அணி இரண்டு தோல்வியை தழுவியுள்ளதால் புள்ளி பட்டியலில் 5 இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ஆறாம் இடத்தில் ஆப்கான் அணி உள்ளது.

இந்த உலக கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், நெதர்லாந்து, இலங்கை ஆகிய அணிகள் பலம் குறைந்த அணிகளாக இருப்பதால், மற்ற ஆறு அணிகளுக்கு இடையே தான் அரையிறுதிக்கு செல்வது யார் என்று போட்டிக்கு இருக்கும் என கணிக்கப்பட்டது. 

இங்கே குறைவாக மதிப்பிடப்பட்டுள்ள அணிகள், பெரிய அணிகளாக கருதப்படும் அணியை வீழ்த்தினால் மட்டுமே இந்த தொடர் விறுவிறுப்பாக அமையும். இல்லையென்றால் சுவாரஸ்யமே இல்லாமல் அமைந்துவிடும் என பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். 

அந்த வகையில், ஆப்கனிஸ்தான் இங்கிலாந்தை வென்றுள்ளதால், எஞ்சி இருக்கும் ஆட்டங்கள் அனைத்தும் சுவாரசியமாக இருக்கும் என் எதிர்பார்க்கப்படுகிறது. 

ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து அணிகளிடம் தோல்வியடைந்துள்ள இங்கிலாந்து அணிக்கு அரை இறுதி செல்வதில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. பெரிய அணிகளுக்கு எதிராக அனைத்து போட்டிகளிலும் வெல்ல வேண்டிய நெருக்கடியில் விளையாடும் சூழல் இங்கிலாந்து உள்ளதால், தொடரில் இருந்து வெளியேறவும் வாய்ப்புள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ICC World Cup 2023 ENG vs AFG match review


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->